கோயம்புத்தூர்: கோவை, பேரூர் சாலை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் கோவை செல்வபுரம் காவல் நிலையம் மற்றும் அந்த பகுதியின் பலவேறு இடங்கள் முன்பு கெத்தாக நின்று ரீல்ஸ் எடுத்து, சர்ச்சைக்குரிய வசனங்களுடன் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனை அடுத்து சமூக வலைதளங்களை கண்காணித்த செல்வபுரம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், சந்தோஷ் குமாரின் ரீல்ஸை பார்த்து அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர் மீது குற்ற நோக்கத்துடன் செயல்படுதல், இரு குழுக்கள் இடையே பகை உணர்வை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நண்பனின் இல்ல நிகழ்வுக்கு சென்ற இடத்தில் சோகம்.. நெல்லை தாமிரபரணி கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு!
இதுகுறித்து போலீசார் கூறுகையில், குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு காவல் நிலையம் முன்பு தவறான வகையில் ரீல்ஸ் எடுத்து போடுவது குற்றம். அதுபோல் பொதுவெளிகளில் மற்றவர்களுக்கு இடையூறாகவோ அல்லது வெறுப்புகளை உருவாக்கும் வகையில் ரீல்ஸ் எடுத்து போடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு காவல்துறையினரின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.