ETV Bharat / state

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரே வாரத்தில் கணவன் கொலை.. 2 ஆயிரம் ரூபாய் பின்னணி? திருப்பத்தூரில் அதிர்ச்சி!

ஜோலார்பேட்டை அருகே 2,000 ரூபாய் பணத்திற்காக ஏற்பட்ட வாய் தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடீஸ்வரன் மற்றும் அவரது குடும்பம்
கோடீஸ்வரன் மற்றும் அவரது குடும்பம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 11:24 AM IST

திருப்பத்தூர்: மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் கோடீஸ்வரன். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் சில வருடங்களுக்கு முன்பு 2,000 ரூபாய் பணத்தை கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த வருடம் கோடீஸ்வரன் சிங்கப்பூருக்கு சென்று ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அப்போது, கோடீஸ்வரன் மணிகண்டனுக்கு 2,000 ரூபாய் கொடுத்த விஷயத்தை கோடீஸ்வரனின் பெரியம்மா பையனான கிருபாகரன் என்பவரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு கிருபாகரன் மற்றும் மணிகண்டன் மற்றும் சிலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது கிருபாகரன் தனது அண்ணனுக்கு மணிகண்டன் 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும், அதனைக் கொடு என்று கேட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மணிகண்டன் மற்றும் கிருபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் மத்திய உளவு பிரிவு எஸ்.ஐ திடீர் மரணம்.. நடந்தது என்ன..?

இதுகுறித்து கிருபாகரன் தனது அண்ணனான கோடீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அங்கு வந்த கோடீஸ்வரனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மணிகண்டன் கோடீஸ்வரனை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோடீஸ்வரன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மணிகண்டனுடன் இருந்த 3 பேரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், அங்கிருந்து தப்பியோடிய மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் பொழுது ஏற்பட்ட வாய் தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.