ETV Bharat / state

காதல் திருமணம்.. 2 ஆண்டு கழித்து பழிதீர்த்த பெண் வீட்டார்.. ஓசூர் இளைஞர் கொலையில் அதிரும் பின்னணி! - hosur youth murder case - HOSUR YOUTH MURDER CASE

youth killed by wife family: கிருஷ்ணகிரியில் இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆந்திராவை சேர்ந்த 8 பேரை தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசனைய்யா, கொலை வழக்கில் கைதான 8 பேர்
ஆசனைய்யா, கொலை வழக்கில் கைதான 8 பேர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 11:56 AM IST

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பத்தளப்பள்ளியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதை கண்ட விடுதி நிர்வாகம் அதிர்ச்சியுற்று அட்கோ போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விடுதியில் இளைஞர் சடலம்: அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் ஆந்திராவை சேர்ந்த ஆசனைய்யா (28) என்பதும் இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் இந்த விடுதியை லீசுக்கு எடுத்ததும் தெரிய வந்தது.

ஆந்திராவுக்கு விரைந்த போலீஸ்: இந்த நிலையில், ஆசனைய்யாவை கொன்றது யார்? எதற்காக கொல்லப்பட்டார்? கொலை பின்னணியில் உள்ளவர்கள் யார் என்ற கோணங்களில் விசாரணை தீவிரமானது. ஆனால், போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காமல் திணறினர். இந்த நிலையில்தான் ஆசனைய்யாவின் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றால் துப்பு கிடைக்கும் என போலீசார் விரைந்தனர்.

காதல் திருமணம்: ஆந்திராவுக்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஆசனைய்யாவுக்கு திருமணமாகி மனைவியும், ஆறு மாத கைக்குழந்தை இருப்பது தெரிந்தது. அதையொட்டி நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகின.

ஆந்திராவை சேர்ந்த ஆசனைய்யா (28) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரம்பீ (22) என்ற பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஆந்திராவிலேயே குடும்பம் நடத்தி வந்தனர். ஆசனைய்யா மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். பிரம்பீ வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மகளின் காதலை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. இதை மீறித்தான் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

ஆறு மாத கைக்குழந்தை: இந்த சூழலில், இருவருக்கும் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும், பிரம்பீயின் குடும்பத்தார் அவரை எப்படியாவது பிரித்து கொண்டு வந்து இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் திட்டத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், ஆசனைய்யா மனைவி, குழந்தையை ஆந்திராவில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு தொழில் தொடங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு வந்து ஒரு விடுதியை லீசுக்கு எடுத்துள்ளார். இதனை அறிந்த, பிரம்பீயின் பெற்றோர் ஆசனைய்யாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, பிரம்பீயின் தந்தை தனது தங்கை மாதேவி என்கிற வீரம்மாவிடம் (35) விஷயத்தை கூறியுள்ளார்.

வீரம்மா அவரது கள்ளக் காதலனான கூலிப்படையை சேர்ந்த ஆந்திராவை சேர்ந்த சீனிவாசுலு (38) என்பவரை அணுகியுள்ளார். அதனை தொடர்ந்து, சீனிவாசுலு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு ஆசனைய்யா தங்கியிருந்த விடுதியிலேயே வைத்து அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியது தெரிய வந்தது.

மேலும், கணவனை தனது குடும்பமே சேர்ந்து கொலை செய்ததை அறியாத பிரம்பீ அதுகுறித்து தனது தாயிடம் அழுது ஆறுதல் அடைந்து வந்ததும் தெரிய வந்தது. பின்னர் கணவனை தாய், தந்தையே சேர்ந்து கொலை செய்ததை அறிந்த பிரம்பீ அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றார். ஆறு மாத கை குழந்தையுடன் கணவனை இழந்து நிற்கும் பிரம்பீயின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆசனைய்யாவை கொலை செய்த ஆசனைய்யாவின் மாமியார், மாமனார், மாதேவி என்கிற வீரம்மா (35), வீரமாவின் கள்ளக்காதலன் சீனிவாசுலு (38) உட்பட கூலிப்படையினர் 8 பேரை தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் திருப்பம்.. ஐஏஎஸ் அதிகாரி மனைவி குஜராத்தில் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.