ETV Bharat / state

தகாத உறவால் வாலிபர் அடித்துக் கொலை; 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது! - Thanjavur Murder - THANJAVUR MURDER

Thanjavur Murder Case: திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்படுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதானவர்கள்
கைதானவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 11:19 AM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனோரா அருகில், கருவேலங்காட்டில் வாலிபர் ஒருவர் அடிபட்ட காயங்களுடன் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 36) உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருமணமான பெண் ஒருவருடன் ராஜாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (22), பத்துக்காடு கிராமத்தை சேர்ந்த குமார் (51) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ராஜாவை மது அருந்தலாம் என அழைத்துச் சென்றதாகவும், அங்கு மரக்கட்டை இரும்பு கம்பியால் தாக்கியதில் ராஜா உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விக்னேஸ்வரன், குமார் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த ராஜாவுக்கு மனைவி மற்றும் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 4 பெண்களுடன் தொடர்பு.. ஐந்தாவதாக 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபர் போக்சோவில் கைது! - Tirupathur POCSO arrest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.