ETV Bharat / state

ரிமாண்ட் செய்யாமல் இருக்க 75 ஆயிரம் லஞ்சம்? நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது இளைஞர் குற்றச்சாட்டு! - bribe - BRIBE

ரிமாண்ட் செய்யாமல் இருக்க 75 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ மீது இளைஞர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளைஞர்
காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 4:19 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தராப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(32). இவர் வெளி நாடுகளுக்கு வேலை ஆட்களை அனுப்பும் எஜென்சி ஒன்றை அதே பகுதியில் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இவருடைய அலுவலகத்தில் வேலூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இளைஞர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலை சம்பந்தமாக சில ஆவணங்களைக் கேட்டு, கோபாலகிருஷ்ணன் அந்த பெண்ணை அடித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் கோபாலகிருஷணனைக் கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் மீது புகார்: இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த கோபாலகிருஷ்ணன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது சிறை செல்வதற்கு முன்பாகவே ரிமாண்ட் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் 75 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று ஆய்வாளர் லதா மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கேட்டனர் என கூறினார்.

அதனைக் கொடுத்தும் என்னைச் சிறையில் அடைத்துவிட்டனர் என குற்றம்சாட்டியுள்ளார். இதில் 35 ஆயிரம் ரூபாய் பணத்தில் சிசிடிவி மற்றும் ஏசி ஆகிய பொருள்களை போலீசாருக்கு வாங்கி கொடுத்ததாகவும், இதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டு சிறை செல்லும் போது உணவு மற்றும் காலணி வாங்கி தருவதாகக் கூறி தன்னுடைய சட்டை பாக்கெட்டில் இருந்து 4500 பணத்தை, உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் எடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து இரண்டு காவல் அதிகாரிகளும் வாங்கிய திருப்பி கொடுக்க வேண்டும் இன்று காலை நாட்டறம்பள்ளி காவல்நிலையம் சென்றுள்ளார்.

அப்போது போலீசாருக்கும்-கோபால கிருஷ்ணனுக்கு இடையே சிறிது தகராறு ஏற்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு உதவி காவல் ஆய்வாளர் மஞ்சுநாதனை, நாம் தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: அதிரடி சோதனையில் இறங்கிய கோவை போலீசார்.. 8 கல்லூரி மாணவர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.