ETV Bharat / state

பஞ்சாயத்தை மீறி போலீசில் புகார் அளித்த இளைஞர்; குடும்பமே ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு - நாகையில் அதிர்ச்சி சம்பவம் - NAGAPATINAM SP OFFICE - NAGAPATINAM SP OFFICE

NAGAPATINAM SP OFFICE: நாகை அருகே அடி தடி சண்டையில், ஊர் பஞ்சாயத்தை மீறி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், இளைஞர் ஒருவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர் வீரையன்
பாதிக்கப்பட்ட இளைஞர் வீரையன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 8:02 PM IST

நாகப்பட்டினம்: திட்டச்சேரி அடுத்த அகரகொந்தகை மேலத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் வீரையன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ், ஹரிஷ்குமார், ஸ்ரீகாந்த் நரேஷ்குமார் ஆகியோருக்கு இடையே ப்ளக்ஸ் போர்டு வைப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இளைஞர் வீரையன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து சுப்புராஜ் ஊரில் புகார் கொடுத்த நிலையில், இந்த சண்டை குறித்து ஊர் கிராமத்தினர் முன்னிலையில் இருதரப்பையும் அழைத்து பஞ்சாயத்து பேசி வீரையனுக்கு 10 ஆயிரம் ரூபாயும், மற்ற நான்கு இளைஞர்களுக்கும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பிரச்சனை பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சண்டையில் காயமடைந்த வீரையன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால், திட்டச்சேரி போலீசார் அவரிடம் புகார் பெற்று, இருதரப்பையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்து சமரசம் செய்து அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊர் பஞ்சாயத்தாரை மீறி வீரையன் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டதாக கூறி, அவருக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதம் 10 ஆயிரம் ரூபாய் உடன் சேர்த்து மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், சண்டையில் பைக் உடைந்ததாக கூறி 60 ஆயிரம் கட்ட வேண்டும் எனவும், இந்த பணத்தை கடந்த 1 ஆம் தேதிக்குள் கட்ட சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கு வீரையன் காவல் நிலையத்தில் பேசி சமரசம் செய்துவிட்டார்கள். ஆதலால் நான் பணம் கட்ட முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் பஞ்சாயத்து கூடி வீரையன் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், அவர் குடும்பத்தோடு யாரும் பேச கூடாது, விஷேத்திற்கு அழைக்க கூடாது என்று தீர்மானம் போட்டு வீடு, வீடாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வீரையன் இன்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து பஞ்சாயத்தை மீறி காவல் நிலையம் சென்றதால் தனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி எஸ்பி ஹர்ஷ் சிங்கிடம் புகார் மனு அளித்தார்.

ஊர் பஞ்சாயத்தை மீறி காவல் நிலையத்தில் இளைஞர் புகார் அளித்ததால், அவரது குடும்பபமே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா! - Nellai Mayor Saravanan resigned

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.