ETV Bharat / state

42 வயது பெண்ணுடன் 28 வயது இளைஞர் 6 ஆண்டுகளாக திருமண வாழ்வு.. திடீர் திருமணத்தால் அண்ணன் கடத்தல்.. நடந்தது என்ன? - ranipet kidnap case - RANIPET KIDNAP CASE

Ranipet kidnap case: ராணிப்பேட்டையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகக் கூறி காதலனின் அண்ணனை கடத்திய வழக்கில் காதலி உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படம்
கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 7:05 PM IST

Updated : Jul 19, 2024, 8:38 PM IST

ராணிப்பேட்டை: கலவை அருகே உள்ள குப்படிசாத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் - குப்பு தம்பதிக்கு ரஞ்சித் (30), சதீஷ் (28) என இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சதீஷ், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே உணவகத்தில் பணியாற்றி வரும் சென்னை பெருங்குடி கல்லுட்டை பகுதியைச் சேர்ந்த சத்யவாணி (42) என்ற பெண் திருமணமாகி கணவருடன் விவாகரத்து ஏற்பட்டு, தனிமையில் வாழ்ந்து வருகிறார். மேலும், சத்யவாணிக்கு பிறந்த இரு பெண் பிள்ளைகளும் விவாகரத்தான அவரது கணவருடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சதீஷுக்கும், சத்யவாணிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி, சதீஷின் குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணமும் செய்து, கடந்த 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு சதீஷுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து, செய்யாறு அடுத்த புளிரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுபாஷினியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மேலும், இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த விவகாரம் சத்யவாணிக்கு தெரியவந்த நிலையில், சதீஷை தொடர்ந்து தன்னுடன் வாழுமாறு சத்தியவாணி கேட்டு வந்ததுடன், இரண்டு முறை வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜுலை 17ஆம் தேதியன்று சத்யவாணி, தனது தோழிகள் தனலட்சுமி (42) மற்றும் புவனேஸ்வரி (28) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலுடன் பேச்சுவார்த்தை நடத்த சதீஷ் ஊரான குப்படிசாத்தம் கிராமத்திற்கு காரில் காலை 5 மணியளவில் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சதீஷ் இல்லாததால் அவரது நிலத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு இருந்த சதீஷின் அண்ணன் ரஞ்சித், சத்யவாணியுடன் சண்டையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கத்தி முனையில் ரஞ்சித்தின் கண்ணை கட்டி காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சதிஷின் தந்தை ராமன் வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் தனது மகன் கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின், முதற்கட்டமாக காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் சென்னை விரைந்து, பெருங்குடி கல்லுகடை பகுதியில் உள்ள சத்யவாணி வீட்டிலிருந்து ரஞ்சித்தை அன்றைய இரவே பத்திரமாக மீட்டனர்.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட சத்தியவாணி, தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கடத்தலில் உதவியாக இருந்த மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. முதியவர் போக்சோவில் கைது! - Sexual Harassment Case

Last Updated : Jul 19, 2024, 8:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.