ETV Bharat / state

ராணுவ வீரரை புடவையால் இறுக்கி கொலை செய்த மனைவி.. விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்..! நடந்தது என்ன? - army soldier murder

சென்னையில் ராணுவ வீரரை கொலை செய்து நாடகமாடிய மனைவியை இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள லீமா ரோஸ் மேரி
கைது செய்யப்பட்டுள்ள லீமா ரோஸ் மேரி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 11:37 AM IST

சென்னை: ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). இவர் இந்திய ராணுவ படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி லீமா ரோஸ் மேரி (36). இந்த நிலையில், கடந்த மே10ஆம் தேதி இரவு அதீத மது போதையில், வேளாங்கண்ணி தாஸ் சுயநினைவின்றி படுத்திருந்தார் எனக்கூறி அவரது மனைவி ஆவடி ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு அவரை பரிசோதனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வேளாங்கண்ணி தாஸ் இறந்த விவகாரத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், வேளாங்கண்ணி தாஸ் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் அவரது மனைவி லீமா ரோஸ் மேரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் "என் கணவர், தினமும் மது போதையில் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், என் பெற்றோரையும் அவதூறாகப் பேசினார். இதனால், ஆத்திரமடைந்த நான், சம்பவ தினத்தன்று, மது போதையில் படுத்திருந்த கணவரை, புடவையில் கழுத்தை நெரித்து, கொலை செய்தேன்" என ரோஸ் மேரி வாக்குமூலம் அளித்ததாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றிய ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், லீமா ரோஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தாம்பரம் காவல் ஆணையர் முதல் தென்மண்டல ஐஜி வரை.. 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.