ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு தேதி மாற்றம்.. காரணம் என்ன? - TRB SGT Exam date Postponed - TRB SGT EXAM DATE POSTPONED

TRB Exam date: தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி எழுத்துத் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், ஜூலை 21ஆம் தேதிக்கு தேர்வு மாற்றப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TRB
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 6:40 PM IST

Updated : Jun 11, 2024, 8:00 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் பணியில் 1,768 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் மார்ச் வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. தமிழ், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் பாடங்களுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2024 ஜூலை மாதம் 53 வயது உள்ளவர்கள் பொதுப் பிரிவிற்கும், இட ஒதுக்கீட்டு பிரிவில் உள்ளவர்கள் 2024 ஜூலை மாதம் 58 வயது முடிய உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வு தாள் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் மொழித் தேர்வில் தகுதி பெற வேண்டும். தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்த தாள் திருத்தப்படும்.

போட்டி எழுத்துத் தேர்வில் தகுதி ஒன்றில் தமிழ் மொழித் தாள் தேர்வில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அதில் தேர்வர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். பகுதி இரண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஐந்து பாடங்களில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்படும்.

மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது சிறுபான்மை மொழியில் ஏதாவது ஒன்றினை அவர்கள் பகுதி இரண்டு தேர்வு செய்து கொள்ளலாம். வினாத்தாளில் மொழிப் பாடத்திற்கான தேர்வுகள் அந்தந்த மொழிகளிலும், ஆங்கில பாடத்திற்கான வினாக்கள் ஆங்கிலத்திலும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.

போட்டித்தேர்வில் பெரும் மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு 26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. இந்தத் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று அமலுக்கு வந்தன. எனவே, அந்த மாவட்டத்தில் போட்டித் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, ஜூலை 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஷாக்.. இதெல்லாம் செய்தால் மதிப்பெண்கள் கட்!

Last Updated : Jun 11, 2024, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.