ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024; திருச்சியில் துரை வைகோ முன்னிலை! - Lok Sabha Election results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலையில் உள்ளார்.

திருச்சி தொகுதி வேட்பாளர்கள்
திருச்சி தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 6:49 PM IST

Updated : Jun 4, 2024, 9:15 AM IST

திருச்சி: உயர்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள் என பலதரப்பட்ட மக்களை கொண்டுள்ள தொகுதியாக திருச்சி திகழ்கிறது. தமிழ்நாட்டின் மைய பகுதியாக விளங்கும் திருச்சியில், நடைபெற்று முடிந்துள்ள 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தம் 67.52 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலையில் உள்ளார்.

தொகுதியில் தற்போது 7,57,130 ஆண் வாக்காளர்களும், 7,96,616 பெண் வாக்காளர்களும் 239 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 15,53,985 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 5,12,264 ஆண் வாக்காளர்களும், 5,36,844 பெண் வாக்காளர்களும் , 102 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 10,49,210 பேர் வாக்களித்துள்ளனர். ஆண் வாக்காளரகள் 67.66 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 67.39 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 42.68 சதவீதமும் என மொத்தம் 67.52 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இங்கு திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, அதிமுக சார்பில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நிர்வாகி கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுகவின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ராஜேஷ் உள்ளிட்டோர் மலைக்கோட்டை மாநகரில் மல்லுக்கட்டி உள்ளனர்.

அபார வெற்றி: திருச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் மொத்தம் 68.89 சதவீத வாக்குகள் பதிவாகின. இவற்றில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய திருநாவுக்கரசர் 59.28 சதவீதம் வாக்குகளை (6,21,285 வாக்குகள்) பெற்றுடன், 4.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அவருக்கு அடுத்ததாக தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவன் 15.46 சதவீத வாக்குகளை (1,61,999 வாக்குகள் ) பெற்றார். அமமுக வேட்பாளரான சாருபாலா தொண்டைமான் 9.62 சதவீதம் (1,00,818) வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட வினோத் 6.23 சதவீதம்‌ (65,286 ஓட்டுகள்) வாக்குகளையும் பெற்றனர்.

கடும் போட்டி: 2019 ல் நடைபெற்ற தேர்தலின்போது அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தது. அதிமுக மீது தமிழக வாக்காளர்கள் மத்தியில் பரவலாக இருந்த அதிருப்தியும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததும், திமுக கூட்டணி வெற்றிப் பெற முக்கிய காரணியாக இருந்தது. ஆனாால் இந்த முறை எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம், திமுக கூட்டணி பலத்துடன் மதிமுகவின் துரை வைகோ ஒருபுறம் களத்தில் நிற்க, மறுபுறம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 10 சதவீதம் வாக்குகளை பெற்ற அமமுக, பாஜக கூட்டணியில் தற்போது மீண்டும் களமிறங்கி உள்ளது. ரங்கராஜன் குமாரமங்கலம் காலத்தில் இருந்தே பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதியாக திருச்சி திகழ்வதால், இக்கூட்டணி எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்றே தெரிகிறது.

இதேபோன்று, 2019 மக்களவைத் தேர்தலில் 15 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்ற தேமுதிக இந்த முறை அதிமுக கூட்டணியில் உள்ளது. இக்கூட்டணியில் அதிமுகவே இங்கு நேரடியாக களமிறங்கி உள்ளதால், இந்தக் கூட்டணியும் கடும் போட்டியை தரும் என்பதில் சந்தேமில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மதிமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவும் மலைக்கோட்டை மாநகரில் இந்த முறை வெற்றிக்கொடி நாட்டப் போகிறவர் யார் என்பது ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.

திருச்சிக்கு படையெடுத்த தலைவர்கள்: திமுக கூட்டணியில் போட்டியிட்டுள்ள மதிமுகவின் துரை வைகோ, திருச்சி பாராளுமன்ற தொகுதி முழுவதும் சூறாவளியாக வலம் வந்து வாக்கு சேகரித்தார். இவருக்கு ஆதரவாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் துரை வைகோவுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் வலம் வந்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

திமுக கூட்டணி வேட்பாளரின் பிரச்சாரம் ஒரு பக்கம் சூடுபிடித்தாலும். பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா உறையூர் பகுதியில் 'ரோடு ஷோ' நடத்தி பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தன் பங்குக்கு செந்தில் நாதனுக்கு ஆதரவாக தென்னூர் உள்ளிட்ட பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நவலூர் குட்டபட்டு மற்றும் தென்னூர் உழவர் சந்தை மைதானம் ஆகிய பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதாவும் கருப்பையாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார் . குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே கருப்பையாவிற்கு நிழலாக செயல்பட்டு, தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024, கோவை தொகுதி: மும்முனைப் போட்டியில் முந்தப் போவது யார்?

Last Updated : Jun 4, 2024, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.