ETV Bharat / state

அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் இழப்பு யாருக்கு? - AIADMK BJP Alliance - AIADMK BJP ALLIANCE

AIADMK - BJP Alliance split: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக - பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு கூட்டணி பிளவும் காரணம் என்று பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை (Credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 7:25 PM IST

சென்னை: 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்தித்திருக்கும் பட்சத்தில் திமுக கூட்டணிக்கு கடுமையான நெருக்கடியினை உருவாக்கியிருக்க வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அதிமுக - பாஜக கூட்டணி உடைந்ததை அடுத்து இரண்டு கட்சிகளும் இந்த தேர்தலில் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், அதிமுக - பாஜக இணைந்து இந்த தேர்தலைச் சந்தித்திருக்கும் பட்சத்தில் 13 தொகுதிகள் வரை வெற்றி பெற்று இருக்க முடியும் என தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, விருதுநகர், தென்காசி (தனி), சிதம்பரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆரணி உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக பெற்ற வாக்குகளை சேர்த்தால் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையை விட அதிகமாக பெற்றுள்ளனர்.

இவ்வாறு கிட்டத்தட்ட 13 தொகுதிகளில் அதிமுக, பாஜக மற்றும் பாமக பெற்ற வாக்குகள் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி கட்சியினரின் வாக்குகளை விட அதிக அளவில் பதிவாகியுள்ளன. ஒருவேளை இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து இந்த தேர்தலைச் சந்தித்து இருந்தால் 13 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பினை உருவாக்கி இருக்கலாம்.

மேலும், இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்ட காரணத்தினால் அதிமுக கூட்டணி 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் 4ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், பாஜகவிற்கு பலம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்பட்ட கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.

இதேபோல் கணிசமான வாக்கு வங்கியை பாஜக கூட்டணி பெற்றிருந்தாலும் மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடிய தனிப் பெரும்பான்மை இல்லாத சூழலால், தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருக்கும் பட்சத்தில் கூடுதலான தொகுதிகள் கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை பாஜக இழந்துள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க இயலாத சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பாஜகவிற்கு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதேபோல, அதிமுக வலுவான கூட்டணியை அமைக்காததும் பெரும் இழப்பு தான். தேர்தலுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணி முறிவு அதிமுகவினரிடையே மகிழ்ச்சியாக பார்க்கப்பட்டாலும், அந்த முடிவு எடுக்கப்பட்ட காலம் என்பது தேர்தலுக்கு நெருங்கிய காலம் என்பதால் அதிமுகவினால் தங்களுடைய கூட்டணியில் மிகப்பெரிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முடியவில்லை.

அதேபோல, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை முடிவு எடுத்தவுடன் கூட்டணி பலத்தை அதிகரிக்க சரியான நடவடிக்கை எடுக்காததும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு உடைந்த போன அணிகளை ஒன்றினைக்க முடியாததும் அதிமுக தோல்விக்கான காரணங்களாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மக்களவை தேர்தல்; அதிமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜக! -எதிர்தரப்புக்கே கலக்கத்தை கொடுத்த ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.