ETV Bharat / state

"கல்பாக்கத்தில் ஏற்கெனவே இயங்கும் சோதனை ஈனுலை" - அணு விஞ்ஞானி அளிக்கும் விளக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 10:44 AM IST

Fast Breeder Reactor: கல்பாக்கம் ஈனுலையில் ஓராண்டில் மின் உற்பத்தி பணிகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது எனவும், இந்த ஈனுலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

IGCAR Director Explains about What is Kalpakkam Einulai project Fast Breeder Reactor
கல்பாக்கம் ஈனுலை குறித்து இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் பேட்டி
கல்பாக்கம் ஈனுலை குறித்து இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி

சென்னை: கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிவேக ஈனுலையில் இருந்து (500 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி இன்னும் ஒரு ஆண்டில் துவக்கப்படும் என இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது அதிவேக ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (Prototype Fast Breeder reactor) (500 மெகாவாட்) 'கோர் லோடிங்' பணி தொடங்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 4) பார்வையிட்டார்.

மேலும், அணு உலையின் பெட்டகம், கட்டுப்பாட்டு அறையை சுற்றிப் பார்த்தார். இந்தியாவின் மிக மேம்பட்ட அணு உலை - முன்மாதிரி விரைவு உற்பத்தி உலையை பாரதிய நாபிகியா வித்யுத் நிகம் லிமிடெட் (The Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited - BHAVINI) உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இந்திய தொழில் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் Prototype Fast Breeder reactor முழுமையாக வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே கட்டப்பட்டுள்ளது.

இந்த அணு உலையில் ஆரம்ப கட்டத்தில் யுரேனியமும், புளூட்டோனியமும் கலந்த ஆக்சைடு (Uranium-Plutonium Mixed Oxide (MOX)) எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அதிவேக ஈனுலைகளில், தோரியம்-232 (Throium-232) தான் Blanket ஆக பயன்படுத்தப்படுகிறது.

ஈனுலைகள் என்றால் என்ன?: தோரியத்தை Blanket ஆக பயன்படுத்தினால், அது யுரேனியம் 233ஆக மாறிவிடும். இந்த யுரேனியம் 233-ஐ மூன்றாம் கட்ட அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். இப்படி இன்னொரு அணு உலைக்கு எரிபொருள் தருவதால், இதனை ஈனுலைகள் என்கிறோம்.

ஈனுலை செலவு: யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளைவிட, இந்த அணு உலைகளை உருவாக்குவதற்கான செலவு மிக அதிகம். ஆனால், மற்ற அணு உலைகளில் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்குரிய செலவும், இந்த அணு உலையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் செலவும் சமமானது என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் வரலாற்றினைப் பாா்த்தால் கடந்த 1985ஆம் ஆண்டு Fast Breeder Test Reactor- கட்டுமானத்தை துவக்கினோம். தற்பொழுது அது நன்றாக முன்னேற்றமடைந்துள்ளது.

அதன் Rated Capacity-ல் 40 MWt, 10MWt மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இதன் அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம் (500 மெகாவாட்) அதிவேக ஈனுலையை (Fast Breeder Reactor) வடிவமைக்கிறது. அதனை பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் (BHAVINI) நிறுவனம் கட்டுமானம் செய்துள்ளனர். பிரதமர் மோடி இதற்கான 'கோர் லோடிங்' (Core Loading) என்ற செயல்பாட்டை நேற்று (மார்ச்.4) துவக்கி வைத்தார்.

கோர் என்பது அணுவைப் பிளந்து அதிலிருந்து வரும் எனர்ஜியை எடுக்கும். அதன் செயல்பாட்டை துவக்கி வைக்கும் வகையில், ஒரு கண்ட்ரோல் ராட்டை முதலில் நேற்று வெற்றிக்கரமாக போட்டுள்ளோம்.

500 மெகாவாட் மின் உற்பத்தி எப்போது தொடங்கும்?: இதனைத்தொடர்ந்து 4 மாதங்களில் எல்லா எரிபொருளும் நிரப்பப்பட்டு, அட்டாமிக் எனர்ஜி (Atomic energy) துறையின் அனுமதியைப் பெற்றப் பின்னர் பிற செயல்பாடுகள் துவக்கப்படும். 5 மாதத்தில் இந்த விரைவு ஈனுலை செயல்பட துவங்கும். பின்னர் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அட்டாமிக் எனர்ஜி துறையின் அனுமதியைப் பெற்று மெதுவாக, 500 மெகாவாட் மின் உற்பத்தியை துவக்குவோம்.

அதிவேக விரைவு ஈனுலையில் நவீன தொழில்நுட்பத்தையும், உள்நாட்டிலேயும் தயார் செய்துள்ளோம். இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்திற்கு (Ministry of Micro, Small and Medium Enterprises - MSME) உட்பட 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

ஆயிரம் அளவில் பொருட்களை வடிவமைத்து பொருத்தி செயல்படுத்தி இயக்கி வருகிறோம். அதிகளவில் சவாலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளோம். நிறைய தொழிற்சாலைகள் சர்வதேச அளவில் பயன்படும் வகையில் இந்த தொழில்நுட்பத்தால் உருவாகி உள்ளன.

அணு உலை கழிவுகளின் பயன்கள்: அணு உலையில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள் வெளிநாடுகளில் 'கழிவு' எனக் கூறுகின்றனர். ஆனால், அது நமக்கு கழிவு கிடையாது. அது வேஸ்ட் இல்லை வெல்த். கழிவில் இருந்து சீசியம்- 137 (Caesium-137) வெளியில் எடுத்துவிடலாம்.

சீசியம் - 137 -ஐ பயன்படுத்தி மருத்துவமனையில் ரத்த பரிமாற்றம் செய்யும்போது, ஸ்டெர்லைஸ் (Sterilize) செய்வதற்கு ரேடியேஷன் (Radiation) பயன்படுத்தி செய்யலாம். அதற்கு சீசியம் - 137 பயன்படும். கோபால்ட் - 60 (Cobalt-60) ரேடியேஷன் தெரபி புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும்.

வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் நடுவில் வைக்கப்பட்டுள்ள வெல்டிங் பரிசோதனை செய்ய கோபால்ட்-60 பயன்படுத்தலாம். இது போன்று ரேடியேஷன் எடுத்து விட்டால் கழிவுப்பொருள் மிகவும் குறைந்துவிடும். அதனை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது.

நமக்கு அணு உலை கழிவுப் பொருள் என்பது பிரச்னையே இல்லை. ஒரு குடும்பம் 25 ஆண்டுகள் நியூக்ளியர் எனர்ஜியைப் பயன்படுத்தினால் ஒரு ட்ரம் (Drum) வரும். அதனைப் பாதுகாப்பாக எடுத்து, அழிப்பது என்பதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது.

யுரேனியம் நம்மிடம் குறைவாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இது அதிகளவில் உள்ளது. நம்மிடம் யுரேனியம் - 238 ( Uranium-238) என்பது உள்ளது. அதனை நேரடியாக பயன்படுத்த முடியாது. யுரேனியத்தில் 0.7 சதவீதம் யுரேனியம் - 235 (Uranium-235) இருக்கிறது.

அதனைத்தான் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். யுரேனியத்தை அணு உலையில் போட்டால், யுரேனியம் - 235 பயன்படும். மீதமுள்ள யுரேனியம் - 238 விரைவு ஈனுலையில் போட்டு, அதனை புளூட்டோனியமாக மாற்றி அதில் இருந்து மின் உற்பத்தி செய்யலாம்.

விரைவு ஈனுலையில் எந்தளவிற்கு எரிப்பொருள் உள்ளே போடப்படுகிறதோ, அதே அளவிற்கு எரிபொருள் மீண்டும் வெளியில் கிடைக்கிறது. இதனால் தான், அதனை 'ப்ரிடர்' (Breeder) எனக் கூறுகிறோம்.

வருங்கால ஈனுலை திட்டத்தில் பெற உள்ள பயன்கள் என்ன?: தற்போது ஒரு விரைவு ஈனுலை அமைத்துள்ளோம். வரும் காலங்களில் 5 விரைவு ஈனுலை அமைக்க வேண்டும் என்றால், இந்தியாவில் தோரியம் அதிகளவில் உள்ளது. தோரியத்தை யுரேனியம் - 233 (Uranium-233) மாற்றி பயன்படுத்தினால், அடுத்த 500 ஆண்டுகளுக்கு எரிசக்திக்கு மிகவும் பயன்படும்.

விரைவு ஈனுலையில் வெளிநாட்டில் இருந்து யுரேனியம் இறக்குமதி செய்வதைக் குறைத்து, நமது நாட்டில் உள்ள தோரியத்தைப் பயன்படுத்தி எரிசக்தியைப் பெறமுடியும். இந்தியாவில் 5 அல்லது 6 விரைவு ஈனுலை துவக்கப்படும். அதன் பின்னர், தோரியம் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியை ஆரம்பிக்க உள்ளோம்.

ஈனுலை மின் உற்பத்தி எப்போது ஆரம்பிக்கும்: விரைவு ஈனுலை தமிழ்நாடு மற்றும் இல்லாமல் பிற மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் கழித்து ஆரம்பிக்கும் அந்த இடத்தின் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்வார்கள். விரைவு ஈனுலையில் மின்சார உற்பத்தி ஒரு ஆண்டில் துவக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அணுஉலையால் பாதிப்பு இருக்கா?: அணு உலையால் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. நான் 38 வருடமாக கல்பாக்கத்தில் பணியாற்றி வருகிறேன். நியூக்ளியரிலிருந்து (Nuclear) வரும் கதிர்வீச்சுக்கும், சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கும் வித்தியாசமே கிடையாது. மருத்துவரிடம் செல்லும் போது எக்ஸ்ரே எடுக்கும் கதிர்வீச்சுக்கு பயப்படுவதில்லை. இந்த கதிர்வீச்சுக்கு ஏன் பயப்பட வேண்டும்.

20 வருடம் ரியாக்டரில் பணியாற்றினாலும், சூரிய வெளிச்சத்தின் மூலம் கிடைக்கும் கதிர்வீச்சை விட குறைவாகத் தான் கிடைக்கிறது. கதிர்வீச்சைப் பார்க்க முடியாது என்பதால் உள் மனதில் பயம் இருக்கிறது. நாம் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவோம். அதனால் பயப்படத் தேவையே கிடையாது.

ரோபோடிக் தொழில்நுட்பம் அவசியம்: அணு உலை தொழில் நுட்பத்திற்கு அனைத்து தொழில்நுட்பங்களும் தெரிந்தவர்கள் தேவைப்படுகின்றனர். பல்வேறு திறன் வாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர். கண்டிப்பாக ரோபோடிக் தொழில்நுட்பம் அதிகளவில் தேவைப்படும். ரேடியேஷன் இருக்கும் பொருட்கள் நேரடியாக தொட முடியாது. ரோபோடிக் மூலமாகத் தான் தொட முடியும். பல்வேறு நிலையில் வேலைவாய்ப்புகளும், பணிகளும் உள்ளது' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாநிலங்களவையில் தொடர் அடி... மக்களவையில் சாதிக்குமா காங்கிரஸ்? நிலவரம் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.