ETV Bharat / state

பி.எஸ்சி, பி.பார்ம் உள்ளிட்ட 19 பட்டப்படிப்பிற்கு எப்போது விண்ணப்பம் தொடக்கம்? - Medical Courses Online Application

Medical Courses Online Application: தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கு மே இரண்டாம் வாரம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி தெரிவித்துள்ளார்.

Medical Courses Online Application
Medical Courses Online Application (photo credit Reporter Ravichandran)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 6:41 PM IST

Medical Courses Online Application (video credits Reporter Ravichandran)

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகளில் மாணவர்களை ஒற்றை சாளர முறையில் சேர்க்கை நடத்துவதற்கான பணிகளை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பிஎஸ்சி மற்றும் பிஓடி, பிபிடி, பிபார்ம், பிஏஎஸ்எல்பி ஆகிய பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் மே மாதம் 2வது வாரம் முதல் தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட உள்ளது.

மேலும், மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சென்று விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும். 2024-2025ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள், 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,536 இடங்கள் இருக்கின்றன.

தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில் 22,200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 14 ஆயிரத்து 157 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்டு இருந்தது. 2023-2024ம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள் 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,500 இடங்கள் இருக்கின்றன. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் பிபார்ம், பிஎஸ்சி, பிபிடி, பிஒடி ஆகிய 4 விதமான பட்டப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டில் 17 ஆயிரம் இடங்கள் உள்ளன.

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அல்லது அதற்கு சமமான குழுமத்தால் நடத்தப்படும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை எடுத்து படித்து இருக்க வேண்டும். சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம், தேனி, கடலூர் ஆகிய 6 மருத்துவக் கல்லூரியில் 350 இடங்கள் உள்ளது.

பி பார்ம் 4 ஆண்டு கால பட்டப்படிப்பு சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதேபோன்று அரசு மருத்துவக்கல்லூரியில் 19 படிப்புகளில் சிறப்பாக நடத்தப்படுகிறது. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 226 கல்லூரியில் 9310 இடங்களும், பிபார்ம் 92 கல்லூரியில் 5680 இடங்களும், பிபிடி 51 கல்லூரியில் 2059 இடங்களும், பிஒடி 9 கல்லூரியில் 397 இடங்களும் என 20 ஆயிரம் இடங்கள் ஒற்றை சாளர முறை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

இந்நிலையில், துணை மருத்துவப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், “12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் மே மாதம் 2வது வாரத்தில் வெளியிட உள்ளோம்.

இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் தேவையில்லை. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒற்றை சாளர முறையில் சேர்க்கை நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த துணைப் பட்டப் படிப்புகள் 19 உள்ளது.

தனியார் கல்லூரிகளில் 4 படிப்புகளுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. 20 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; நயினார் நாகேந்திரன் உறவினர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்! - CBCID Investigate In 4 Crore Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.