ETV Bharat / state

ஒரு கிலோ ரு.100-ஐ கடந்த தக்காளி; 2 மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை.. காய்கறி சங்கத் தலைவர் கூறுவது என்ன? - TOMATO PRICE

வரத்துக் குறைவு காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு தக்காளி விலையில் பெரிய மாற்றம் இருக்காது என கோயம்பேடு காய்கறி சங்கத் தலைவர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்

தக்காளி(கோப்புப்படம்)
தக்காளி(கோப்புப்படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 9:02 PM IST

சென்னை: பருவ மழை உள்ளிட்ட காரணிகளால் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை தக்காளி விலை சற்று அதிகரிப்பது வாடிக்கைதான் என்றாலும் நடப்பு ஆண்டில் கிடுகிடுவென விலை உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் 50 மற்றும் 60 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை, தற்போது 100 ரூபாயை தொட்டிருக்கிறது.

இது குறித்து கோயம்பேடு காய்கறி சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமாரிடம் பேசினோம், அப்போது அவர் கூறுகையில், "கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 55 முதல் 60 லாரிகளில் சுமார் 1300 டன் தக்காளி விற்பனைக்கு வரும். அப்படி வரும் தக்காளிகள் தமிழகத்தில் மட்டும் இன்றி அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் விற்பனைக்கு வருகிறது.

மழைப் பொழிவு: இந்த நிலையில் தற்போது அண்டை மாநிலங்களில் மழைப் பொழிவு இருப்பதாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைச்சல் முடிந்து இருப்பதாலும், தற்போது 32 முதல் 35 லாரிகளில் 850 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

அதாவது வழக்கமாக வருவதை விட 400 ஒரு டன் தக்காளி குறைவாக வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் 50 மற்றும் 60 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை தற்போது 100 ரூபாயைத் தொட்டு இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: இப்படியெல்லாம் கொலு வைக்க முடியுமா? நவராத்திரி கொலுவுக்காக வீட்டையே அர்ப்பணித்த திருநெல்வேலி குடும்பம்!

இன்றைய விலை? கோயம்பேடு சந்தையில் இன்று 25 கிலோ உள்ள பெரிய பெட்டி, முதல் தர தக்காளி 2000 ரூபாய்க்கும், 15 கிலோ உள்ள பெட்டி ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதில் இரண்டாம் தர தக்காளி 1700 ரூபாய் முதல் 1600 ரூபாய் வரையும், சிறிய ரக தக்காளி 800 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மார்க்கெட் பகுதிகளில் சில்லறை விற்பனையாக கிலோ 90 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து (கோயம்பேடு) வாங்கப்பட்டு சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் தக்காளி 100 ரூபாய் வரையும், இன்னும் சில இடங்களில் 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது" எனக் கூறினார்.

விலை குறைய வாய்ப்பில்லை: தொடர்ந்து பேசிய எஸ்.எஸ்.முத்துக்குமார், "வரத்து குறைவு காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு தக்காளி விலையில் பெரிய மாற்றம் இருக்காது, சிறிய அளவில் மட்டுமே இருக்கும். மேலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 55லிருந்து 60 ரூபாய் வரை தக்காளியின் விலை குறையும் என தெரிவித்தார்.

அதேபோல் பழைய நிலைக்கு தக்காளி விலை வருவதற்கு ஜனவரி மாதம் ஆகும். இதற்கிடையே அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளில் மழை குறைந்தால், தக்காளியின் வரத்து அதிகரித்து விலை குறையும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.