ETV Bharat / state

அரசியல்வாதியாகும் இன்னொரு ஐஏஎஸ் அதிகாரி? அனீஷ் சேகர் ராஜினாமாவின் பின்னணி என்ன? - Aneesh sekhar ias resigned

Aneesh sekhar IAS: தமிழ்நாடு அரசின் எல்காட் மேலாண் இயக்குநராக பணியாற்றிய அனீஷ் சேகர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

what is the reason behind ELCOT MD Aneesh sekhar ias resigned
அனீஷ் சேகர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 6:28 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் எல்காட் (Electronic Corporation of Tamilnadu) மேலாண் இயக்குநராக இருந்தவர் (Managing Director) அனீஷ் சேகர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான இவர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவுக்கு கடிதம் எழுதினார். இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட சிவதாஸ் மீனா, பிப்ரவரி 29ஆம் தேதி முதல் அனீஷ் சேகரை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

38 வயதான அனீஷ் சேகர், 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். மருத்துவரான அனீஷ் சேகர், ராஜினாமாவுக்கு பின், கேரளாவுக்குச் சென்று மருத்துவப் பணியினை மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அனீஷ் சேகர் தேசிய கட்சி ஒன்றில் சேர்ந்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் ராஜினாமா செய்துவிட்டு, அரசியலில் குதித்துள்ளனர். சகாயம், ஜக்மோகன் சிங் ராஜூ, சந்தோஷ் பாபு, ஷம்பு கல்லோலிகர் என அனைவருமே அரசியலில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இந்த வரிசையில் அனீஷ் சேகரும் அரசியலில் ஈடுபடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.