ETV Bharat / state

நெல்லையில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கடத்தல்: 3 பேரை சுற்றி வளைத்துப் பிடித்த வனத்துறை! - WHALE SPIT AMBERGRIS SMUGGLING

திருநெல்வேலியில் 2.7 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளை விற்க முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 4:10 PM IST

திருநெல்வேலி: பாபநாசம் அருகே சுமார் 2.7 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளை விற்க முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மீனவரிடமிருந்து உமிழ்நீர் கட்டியை பெற்றது தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் பாபநாசம் வனச்சரகத்திற்குட்பட்ட அகஸ்தியர்பட்டி பகுதியில், கடல் வாழ் வன உயிரினமான திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளைக் கடத்தி வந்து விற்பனை செய்வதாக வனத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் இளையராஜா உத்தரவின் பேரில், பாபநாசம் வனச்சரக அலுவலர் குணசீலன் தலைமையில் தனிக்குழு அமைத்து, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த செல்வம் (29), பரமசிவன் (45) மற்றும் வீரவநல்லூரைச் சேர்ந்த சவரிதாசன் (41) ஆகிய மூன்று பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் வாட்ஸ்ஆப் செயலி மூலம் திமிங்கல உமிழ் நீர் கட்டிகளை ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 2.7 கிலோ திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள்
பறிமுதல் செய்யப்பட்ட 2.7 கிலோ திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையின்போது அகஸ்தியர்பட்டி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 2.7 கிலோ எடை கொண்ட திமிங்கல உமிழ்நீர் கட்டிகளையும், காகிதப் பையிலிருந்த துகள்களையும் வனச்சரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: போலி கணக்கு எழுதி லட்சக்கணக்கில் கையாடல் செய்த பெண் கணக்காளர்! சிக்கியது எப்படி?

அந்த விசாரணையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் மிதந்த உமிழ்நீர் கட்டியை எடுத்து வந்து களக்காடு அருகே திருக்குறுங்குடியைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் விற்பதற்கு முன்பணம் வாங்கியுள்ளதாகவும், ஆனால் அவர்களிடம் விற்காமல் தற்போது பிடிபட்டுள்ள கும்பலிடம் விற்றதால் பணத்தை இழந்த நபர்கள் ஆத்திரத்தில் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், பிடிபட்ட மூன்று பேரையும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 இன் 2(1), 2(11), 2(32), 2(36), 2(37), 2(16)(b)(c), 9, 39(b), 44(1) (a), 49(B), 50, 51(1), 51(1)(1A), 52, 57 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்த வனச்சரக அலுவலர்கள், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.