ETV Bharat / state

எலிவால் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.. எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சி! - Elival falls

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியான எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனைக் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

எலிவால் அருவி
எலிவால் அருவி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 1:36 PM IST

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையின் அமைந்துள்ளது தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியான எலிவால் அருவி. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு மாதங்களாக மழை பொய்யாததால் கொடைக்கானல் செல்லும் சாலையின் டம் டம் பாறை பகுதியின் எதிரே உள்ள எலிவால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து குறைந்து வற்றிக் காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று (செப்.27) மாலை மற்றும் இரவு நேரத்தில் எலிவால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக எலிவால் அருவிக்கு நீர் வரத்து துவங்கியுள்ளது. அதனால், அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

இதையும் படிங்க: "வெளியே போறீங்களா அப்போ இத மறந்திடாதீங்க".. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தானாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தற்போது காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எலிவால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும் நீரைக் கண்டு மகிழ்ச்சி அடைவதோடு, புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.