ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் சீர்செய்யப்பட்ட கழிவறைகள் திறப்பு; தென்காசி அறக்கட்டளையின் அசத்தல் மிஷன்! - Tenkasi toilet cleaning mission

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை (Voice Of Tenkasi Foundation) மற்றும் ஸ்பிரிண்ட்6 (Sprint6) நிறுவனம் இணைந்து முதற்கட்டமாக தென்காசியின் அரசு பள்ளிகளின் கழிவறைகளை சீர்செய்த நிலையில் அந்த கழிவறைகளுக்கு இன்று திறப்பு விழா நடைபெற்றது.

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை  நிறுவனர் ஆனந்தன்
வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 6:56 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையாக பராமரிப்பின்றி இருந்த கழிவறையை வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை (Voice Of Tenkasi Foundation), ஸ்பிரிண்ட்6 (Sprint6) நிறுவனத்துடன் இணைந்து சீர் செய்யும் பணியை சமீபத்தில் தொடங்கியது.

இந்த சீர் செய்யும் பணியில் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்த கழிவறைகள் வாய்ஸ் ஆப் தென்காசியின் முயற்சியால் சீர்படுத்தப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது பேசிய அவர், “முறையான சுகாதார வசதிகள் இல்லாததால் 60% பெண் குழந்தைகள் மாதவிடாய் காரணமாக பள்ளியைத் தவறவிடுகின்றனர் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகவும் வேதனைக்குரியது. மேலும் உலக சுகாதார நிறுவன ஆய்வில் 40% மாணவர்கள் பள்ளி கழிவறைகளை பயன்படுத்த பயப்படுவதால் ஒரு நாளைக்கு ஒரு லிட்டருக்கும் குறைவாக குடிநீர் எடுத்துக்கொள்ளுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவேதான் நாங்கள் கழிவறைகளை சீர்படுத்தும் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளோம். அதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் அரசுப்பள்ளிகள் குறித்த ஒரு ஆய்வு முடிவை அறிவித்தது.

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் மாணவர்களிடம் பேச்சு (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: மழை நீரில் மூழ்கிய சேக்காடு சுரங்கப்பாதை, கொரட்டூர் இஎஸ்ஐ.. நிரந்தரத் தீர்வு காண கோரிக்கை!

அதில் 80% அரசுப் பள்ளி கழிவறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை கருதில் கொண்டு தென்காசி மாவட்ட அரசுப் பள்ளிகளில் உள்ள கழிவறைகளைச் சீர்படுத்த முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக 1000 கழிவறைகள் சீரமைக்கப்பட்ட உள்ளது. அதற்கான தொடக்கம்தான் இன்றைய விழா. மாணவர்கள் எல்லோரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்றார்.

இதையடுத்து இந்த கழிவறை சீர்படுத்தும் முன்னெடுப்பில் அனைவரும் பங்கெடுக்கலாம். நீங்கள் உதவுதால் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மேலுன் மாணவர்களின் வருகை மற்றும் செயல்திறனை அதிகரிக்கச் செய்யலாம். பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடையில் நிற்கும் சூழலை மாற்றிமைக்க முடியும் என வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கல்வியாளர் மருதையா, வழக்கறிஞர் மைதின் பாரூக், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், தலைமை ஆசிரியை நஜ்முன்னிசா, ஸ்பிரிண்ட்6 நிறுவனர் காளி சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.