தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இருமத்தூர் பகுதி தென்பெண்ணை ஆற்றிக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்து ஆற்றில் கரைத்து வழிபட்டனர்.
இரண்டு மாவட்டங்களுக்கு மையமான பகுதி என்பதால் இரண்டு மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான சிலைகள் தென்பெண்னை ஆற்றில் கரைக்கப்பட்டது. சுமார் அரை அடி உயரத்தில் இருந்து 7 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.
பாதுகாப்பு பணியில் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றங்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு எச்சரித்தனா்.
காலை 10 மணி முதல் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் விநாயகர் சிலையை கரைத்து வழிபட்டனர். இதில் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியைச் சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் மித்ரன். இவர் ஆசைப்பட்டது போல விநாயகர் சதுர்த்தி அன்று அவர் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டுள்ளார்.
அந்த வழிபட்ட விநாயகர் சிலையை ஆற்றில் தான் கரைக்க வேண்டும் என தனது தாய் கௌசல்யாவிடம் கூறி பதினைந்து கிலோமீட்டர் பயணம் செய்து தென்பெண்ணை ஆற்றில் தனது விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு, பின் பாதுகாப்பான முறையில் ஆற்றில் கரைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து பேசிய மித்ரனின் தாய் தனது மகனின் ஆசைக்காக விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபாடு நடத்தி தற்போது ஆற்றில் கரைத்துள்ளோம். இதில் மித்ரன் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார்” என்றார்.
மேலும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நத்தமேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பேசும்போது, “15 ஆண்டுகளாக சிலை கரைக்க இருமத்தூர் பகுதிக்கு வருவதாகவும் இந்த ஆண்டு சென்ற ஆண்டை விட கூட்டம் அதிகமாக உள்ளது என்றும் ஆற்றில் இந்த ஆண்டு நீர்வரத்து குறைவாக உள்ளது. எங்களுடன் 40க்கும் மேற்பட்டோர் தங்களது சிலையை கரைக்க வந்திருக்கிறார்” என்றார்.
அதேபோல் குருபரஅள்ளி பகுதியைச் சேர்ந்த வினோத் பேசும்போது, “ 18 ஆண்டுகளாக தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி சிலைகளை கரைக்க இங்கு வருவதாகவும். சென்ற ஆண்டு விட இந்த ஆண்டு கூட்டம் ம்ற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக உள்ளது. காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். தீயணைப்புத் துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் இருகிறார்கள்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் பலி.. தேனியில் சோகம்!