விழுப்புரம்: விழுப்புரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார், அதிமுக வேட்பாளர் காந்தலவாடி பாக்கியராஜை விட 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் இணையத்தள விபரம்...
வ.எண் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1. | ரவிக்குமார் | வி.சி.க | 4,77,033 |
2. | காந்தலவாடி | அ.தி.மு.க | 4,06,330 |
3. | முரளி சங்கர் | பா.ம.க | 1,81,882 |
4. | களஞ்சியம் | நா.த.க | 57,242 |
- விழுப்புரம் தனித் தொகுதியில், 10வது சுற்று வாக்கு எண்ணிிக்கை முடிவில், விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார் 233419 வாக்குகளும், அதிமுகவின் காந்தலவாடி பாக்கியராஜ் 184333 வாக்குகளும் பெற்றுள்ளனர். பாமக வேட்பாளர் முரளி சங்கர் 81067, நாம் தமிழர் கட்சியின் மு. களஞ்சியம் 29,835 வாக்குகளும் வாங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமார் 49,086 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்
- விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், காலை 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, விசிக வேட்பாளர் ரவிக்குமார் 45,880 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் 41,382 வாக்குகளை பெற்றுள்ளார். இதனால் விசிகவுக்கும், அதிமுகவுக்கு இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான விசிகவின் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் பானை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் அக்கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் இரட்டை இலை சின்னத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் அக்கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கரும் களமிறங்கி உள்ளனர். யாருடனும் கூட்டணி இல்லை என்று மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக இயக்குனர் களஞ்சியமும் போட்டியிடுகிறார். கடந்த முறை 81.9 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 11,50,164 (76.52%) வாக்குகளே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தலில் வென்றது யார்?: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிட்டு 5,59,585 வாக்குகள் பெற்றதுடன் 11% வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றியும் பெற்றார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். சுயேச்சை வேட்பாளர் கணபதி 58,019 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலாதா 24,609 வாக்குகளையும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி 17,891 ஓட்டுகளை பெற்றார்.
இதையும் படிங்க: தேர்தல் 2024; விழுப்புரத்தில் சிவி சண்முகத்தின் வியூகம் பலிக்குமா? வெற்றியை தக்க வைப்பாரா ரவிக்குமார்? - Lok Sabha Election 2024