ETV Bharat / state

தவெக மாநில மாநாடு; முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து டிஐஜி திஷா மிட்டல் ஆய்வு!

தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநாடுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழுப்புரம் டிஜஜி ஆய்வு செய்து வருவதாக தவெக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், புஸ்ஸி என்.ஆனந்த் டிஐஜி சந்தித்த போது
விஜய், புஸ்ஸி என்.ஆனந்த் டிஐஜி சந்தித்த போது (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 10:19 PM IST

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

தற்போது தவெக மாநாடு நடைபெறும் இடத்தை, விழுப்புரம் மாவட்ட சரக காவல் துணைத் தலைவர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மாநாட்டில் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படாமல் இருக்க தென்மாவட்ட பகுதியான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி என பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தவெக மாநாடு வெற்றி பெற நடிகர் தாடி பாலாஜி பிரார்த்தனை

அதன்படி, தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை விழுப்புரத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் தடையின்றி செல்லவும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், பேரிகார்ட் அமைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செஞ்சி நான்கு முனை சந்திப்பிலும், விழுப்புரம் மாவட்ட சரக காவல் துணைத் தலைவர் திஷா மிட்டல் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளுக்கு மத்தியில் தவெக மாநாட்டுக்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மாநாட்டிற்கான பணிகள் தொடர்பாக விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் மற்றும் எஸ்.பி தீபக் சிவாச் உள்ளிட்டவர்களின் அழைப்பின் பேரில், டிஐஜி மற்றும் எஸ்.பி அலுவலகத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வருகை புரிந்து உரையாற்றினார்.

இந்த உரையாடலில் மாநாடு நடத்துவது தொடர்பாக போலீசாரின் 33 நிபந்தனைகள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 33 நிபந்தனைகளில் எந்தெந்த நிபந்தனைகள் தற்பொழுது வரை முடிக்கப்பட்டுள்ளது என புஸ்ஸி ஆனந்த் விளக்கி கூறியதாக தவெக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.