ETV Bharat / state

பிப்.12-இல் ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு! - பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை

Rajesh das case: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது வருகிற திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 7:02 PM IST

Updated : Feb 10, 2024, 6:32 AM IST

விழுப்புரம்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கவனித்தார். நிகழ்ச்சி முடிந்து ராஜேஷ் தாஸ் காரில் சென்றபோது, பெண் எஸ்பி ஒருவரை காரில் ஏற்றிக் கொண்டுள்ளார்.

அப்போது ராஜேஸ் தாஸ், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபியிடம் பெண் எஸ்பி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ராஜேஸ்தாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து, ராஜேஸ் தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பின், விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனுவில் முகாந்திரம் இல்லை என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இரு வேறு அமர்வுகளில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுக்கள், ஜனவரி 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், தண்டனைக்கு எதிராக ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, வரும் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகி வாதம்!

Last Updated : Feb 10, 2024, 6:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.