ETV Bharat / state

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”.. தவெக உறுதிமொழி ஏற்பு!

இந்திய விடுதலைக்காகவும் எனத் தொடங்கும் தவெக உறுதிமொழியை விஜய் உள்பட அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர்.

விஜய்
விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இதில் மேடைக்கு வந்த தவெக தலைவர் விஜய், தொண்டர்களுக்கு கை அசைத்தார். தொடர்ந்து, அவர் தமிழ் மன்னர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தவெக மாநாடு தொடங்கியது. இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனை, கட்சியின் பொருளாளர் வெங்கட் ராமன் வாசித்தார். அதில், “தமிழக வெற்றிக்கழகம், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும். விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணிலிருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

இதையும் படிங்க: 15 வருட தவம்.. ஆர்ப்பரிக்கும் தவெக தொண்டர்கள்!

நமது அன்னை தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காககும் பொறுப்புள் தனிமனிதராமப செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை , சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக் பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். சாதி மதம் பாலினம் ,பிறந்த இடம் ஆகிவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன்” என ஏற்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.