ETV Bharat / state

சரக்குக்கு பில் கொடுங்க.. இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட டாஸ்மாக் ஊழியர்.. வைரலாகும் வீடியோ! - TASMAC VIRAL VIDEO - TASMAC VIRAL VIDEO

திருவாரூர் அரசு மதுபான கடையில், தான் வாங்கிய மது பாட்டிலுக்கு இளைஞர் ஒருவர் பில் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டாஸ்மாக் ஊழியர்
டாஸ்மாக் ஊழியர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 1:36 PM IST

திருவாரூர்: சமீப காலமாக அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு, அதாவது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இதனைக் கொடுக்க மறுக்கும் மது பிரியர்கள், தங்கள் வாங்கும் மது பாட்டிலுக்கு பில் கேட்டு வருவதோடு, இது தொடர்பான வீடியோக்களை எடுத்து அதனை தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மது பாட்டிலுக்கு இளைஞர் பில் கேட்கும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபான கடையில் பில் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவாரூர், வலங்கைமான் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பாடை கட்டி மாரியம்மன் என்கிற மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அரசு டாஸ்மாக் கடை எண் - 9660.

இங்கு வந்த இளைஞர்கள் சிலர் 300 ரூபாய் கொடுத்து மதுபானம் வாங்கிவிட்டு அதற்கு பில் கேட்கின்றனர். மேலும் இதனை தங்களது செல்போனில் வீடியோவாகவும் அவர்கள் பதிவு செய்கின்றனர். இதனைக் கவனித்த டாஸ்மாக் ஊழியர் அவரது செல்போனில் பதிலுக்கு இளைஞர்களை படம் பிடிக்கிறார்.

இதனால் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 'நீ உறவினர் என்று பார்க்கிறேன்' என டாஸ்மாக் ஊழியர் வீடியோ எடுப்பவரிடம் கூறும் ஆடியோவும் அதில் பதிவாகியுள்ளது. இருப்பினும் இளைஞர் வீடியோ எடுப்பதை நிறுத்தவில்லை, தொடர்ந்து நான் வாங்கும் மதுவிற்கு பில் கொடுத்தே ஆக வேண்டும் என கூறி வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் கோபம் அடைந்த டாஸ்மாக் ஊழியர், வீடியோ எடுத்த இளைஞரின் செல்போனை தட்டி விடுகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூல வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் கடைசி வரையில் இளைஞர் பில் வாங்கினார் இல்லை என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: 'இந்த ரூட்ல எப்படி வருவ?' உருட்டு கட்டையுடன் பாய்ந்த மினி பஸ் டிரைவர்.. பயணிகள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.