ETV Bharat / state

திருவாரூரில் 5 மணிக்கே தொடங்கிய மது விற்பனை.. ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் உடந்தையா? - Illegal liquor Sale in Thiruvarur - ILLEGAL LIQUOR SALE IN THIRUVARUR

Illegal liquor Sale in Thiruvarur: திருவாரூரில் காலை 5 மணியிலிருந்தே மதுபானம் விற்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரே கள்ளச் சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்டவிரோதமாக விற்கப்படும் அரசு மதுபானம்
சட்டவிரோதமாக விற்கப்படும் அரசு மதுபானம் (Credit -ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 9:08 PM IST

திருவாரூர்: கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கமலாபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த அரசு மதுபானக் கடைக்கான பார் உரிமத்தை வேறொருவரின் பெயரில் எடுத்து, கமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவி பிரபாவதியின் கணவரும், ஊராட்சி எழுத்தருமான கமலாபுரம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த அமர்நாத் என்பவர் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

மதுபானம் சட்டவிரோதமாக விற்கப்படும் காட்சி (Credit -ETVBharat TamilNadu)

இந்த நிலையில், கமலாபுரம் அரசு மதுபானக் கடையில் பாரில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் அமர்நாத் பாருக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் வைத்து காலை 5 மணியிலிருந்து கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், அரசு மதுபானக்கடை பூட்டப்பட்ட பிறகு 10 மணிக்கு மேல் பாரில் அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மே 7ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கமலாபுரம் பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மதுபானத்தை விற்பனை செய்த தட்சிணாமூர்த்தி என்பவர் மகன் அமர்நாத் (45) கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து 55 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று காலை 5 மணியிலிருந்து பாருக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் அரசு மதுபானங்களை கள்ளச் சந்தையில் ஒருவர் விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது மனைவி ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கும் ஊராட்சிலேயே, கள்ளச் சந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்யும் ஊராட்சியில் எழுத்தராக அரசுப் பணியில் இருக்கும் அமர்நாத் என்பவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கெட்டுப்போன பிரியாணி வழங்கியதாக தகராறு.. வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்! - Chennai Biryani Shop issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.