ETV Bharat / state

"போ சாமி போ, நல்ல பையன்ல" - மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த யானையைக் கொஞ்சி பேசி விரட்டிய மக்கள்! - Video of chasing away the elephant - VIDEO OF CHASING AWAY THE ELEPHANT

Viral video of elephant: போலுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாட்டு கொட்டகைக்குள் புகுந்த யானையை அப்பகுதி மக்கள், “போ சாமி நல்ல பையன்ல” மாடுகள் பயப்படுகிறது என கொஞ்சி பேசி விரட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

“போ சாமி போ, நல்ல பையன்ல” - மாட்டு கொட்டகைக்குள் புகுந்த யானையை கொஞ்சி பேசி விரட்டிய மக்கள்!
video-of-elephant-that-entered-a-cowshed-and-chased-it-away-by-talking-to-it-is-going-viral-in-coimbatore
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 3:46 PM IST

Updated : Apr 3, 2024, 4:17 PM IST

“போ சாமி போ, நல்ல பையன்ல” - மாட்டு கொட்டகைக்குள் புகுந்த யானையை கொஞ்சி பேசி விரட்டிய மக்கள்!

கோயம்புத்தூர்: கோடைக்காலம் தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகின்றன.

இதனால், வனத்துறையினர் வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வருகின்றனர். எனினும் உணவு பற்றாக்குறை இருப்பதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவது தொடர்கிறது. குறிப்பாக மதுக்கரை, போளுவாம்பட்டி, தடாகம், மருதமலை வனப்பகுதிகளில் உள்ள யானைகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் புகுந்து, விவசாய பயிர்களைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீடுகளை உடைத்து உள்ள இருக்கும் அரிசி, மாட்டுத் தீவனங்களைச் சாப்பிட்டு வருகிறது.

இந்த நிலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட காருண்யா அருகே உள்ள சப்பானிமடை பகுதியில் நேற்று (ஏப்.2) இரவு ஒற்றை யானை விவசாய நிலத்திற்குள் புகுந்து, அங்கிருந்த விவசாய பயிர்களைச் சாப்பிட்டது. பின்னர் அங்கு இருந்த மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்து அங்கிருந்து புண்ணாக்கு மூட்டையைத் தூக்கிச் சென்றது.

இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த யானை பார்த்து அங்கிருந்தவர்கள், “போ சாமி போ, நல்ல பையன்ல. மாடுகள் பயப்படுகிறது” என கொஞ்சி பேசி யானையை விரட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் குடியிருப்புக்குள் நுழையும் படையப்பா யானை.. சிசிடிவி காட்சிகள் வெளியானது! - Padayappa Elephant

Last Updated : Apr 3, 2024, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.