ETV Bharat / state

கோவில் பூசாரி மீதான பாலியல் வழக்கு; விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு! - Transfer investigation to CBCID

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 9:49 PM IST

Petition on transfer investigation to CBCID: சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீதான பாலியல் புகாரின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்திக் முனுசாமி மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம்
கார்த்திக் முனுசாமி மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரிக்கு எதிராக அளித்த பாலியல் புகாரின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி புகாரளித்த பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப்.27) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சாலிகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த போலீசார், அவரை தேடி வருகின்றனர். முன்ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடக்கோரி, புகார் அளித்த பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் அவர், 'புகார் அளித்ததற்காக கார்த்திக் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், தான் அளித்த புகார் அடிப்படையில் கார்த்திக்கை இன்னும் காவல்துறை கைது செய்யவோ அல்லது அவரிடம் விசாரணை நடத்தவோ? இல்லை' எனவும் கூறியுள்ளார்.

'காவல் துறையினர் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாகவும் கூறியுள்ள அவர், அதனால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எடை குறைப்பு சிகிச்சையில் வாலிபர் பலி.. பிபி ஜெயின் மருத்துவமனையின் உரிமம் ரத்து செல்லாது! - Chennai High Court

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.