ETV Bharat / state

"ஆளுநருடன் மோதல் போக்கு வேண்டாம் என முதல்வர் அறிவுரை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியது என்ன?

துணைவேந்தர் நியமனத்தில் உள்ள மோதல் களையப்பட்டு விரைவில் நியமிக்கப்படுவர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் கோவி.செழியன்
ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் கோவி.செழியன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 6:36 PM IST

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில், உயர் கல்வித்துறை அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி செழியன் கூறியது, "முதலமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்துவது குறித்து உயர் கல்வித்துறையின் அதிகாரிகளுடன் முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி உள்ளோம். இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தியாவில் 2030 ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு 59 சதவீதம் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அடைந்துள்ளது. மத்திய அரசிற்கும், இதுதான் கல்விக் கொள்கை என செல்லும் அளவிற்கு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

'நான் முதல்வன் திட்டத்தின்' மூலம் மாணவர்களின் தங்களின் திறனை வளர்த்து கொண்டு, வேலை வாய்ப்பினை பெற வேண்டும். துணைவேந்தர், பதிவாளர், கண்காணிப்பாளர் பணியிடம் குறித்த விபரங்களைப் பெற்றுள்ளோம். அந்த இடங்களை முதலமைச்சருடன் கலந்து பேசி நிரப்புவோம்.

இதையும் படிங்க: பெண்கள் மன உளைச்சலில் இருந்தால்.. அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட முக்கிய தகவல்!

பதிவாளர் நிரந்தரமாக இல்லாத நிலையை உருவாக்குவோம். துணை வேந்தர் நியமனத்திலும் அரசின் கருத்தை அறிந்து விரைந்து செயல்படுவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளில் விழிப்புணர்வைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

மாநிலக் கல்லூரி மாணவர், பச்சைப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. வரும் காலங்களில் மாணவர்களிடம் குழு மனப்பான்மை இல்லாமல் இணைந்து செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் கவுர விரிவுரையாளர் பணியிடங்களை நியமனம் செய்தார். அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு தேர்விற்கான செயல்பாடுகளை துவக்கி உள்ளோம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நான்காயிரம் உதவி பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வு, விரைவில் அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது கடந்த காலத்திலிருந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது மாணவர்கள் படிக்கும் காலத்தில் ஹூரோவாக இருக்கின்றனர்.

மாணவர் பருவத்தில் ஒற்றுமை உணர்வுடனும், சமூக நலனுடன் இருக்க வேண்டும். கல்லூரி மற்றும் பல்கலைக் களத்திற்கு சென்று கள ஆய்வு செய்து குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு திடீர் ஆய்வு செய்து, கல்லூரியின் நிலை, மாணவர்கள் வருகை போன்றவற்றை ஆய்வு செய்து அதனனை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

ஆளுநருடன் முரண்பாடு வேண்டாம்: "தமிழ்நாடு ஆளுநருடன் முரண்பாடு தேவையில்லை என்பதுடன், முறையான நெறி முறைப்படி மாணவர் நலன் காக்க எவை எவை செயல்படுத்த வேண்டியவையோ அவைகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார். எனவே நமது மாநில உரிமை, தமிழ்நாடு அரசின் கல்வி நிலை, உயர்கல்வி நிலையங்களின் கொள்கை நிலை இவைகளை நிலை நிறுத்தித்தான் செயல்பாடுகள் அமையும் .

எனவே முட்டல் மோதல் என்பது என்றைக்கும் இல்லை. என்றும் நட்புணர்வுடன் இந்தத்துறையும், தமிழ்நாடு முதலமைச்சரும் உறுதுணையாக இருப்போம். துணைவேந்தர் தேர்வுக்குழு குறித்து முதலமைச்சருடன் கலத்து பேசி, துணைவேந்தர் நியமனத்தில் உள்ள முரண்பாடுகள் விரைவில் களையப்பட்டு, துணைவேந்தர்கள் நியமனம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.