அரியலூர்: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் கடந்த ஒரு வாரமாக மக்களைச் சந்தித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிகளவு இளைஞர்களைக் கவரும் விதமாக டிஜிட்டல் முறையில் கியூ.ஆர் கோட் (QR Code) மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
விசிக சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் காணப்படும் கியூ.ஆர் கோட்-யை (QR Code) செல்போனில் பார்க்கும்போது திரையில் திருமாவளவன் தோன்றி, இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவம், மக்களிடம் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், தனக்கும் தொகுதிக்கான உறவுகள் குறித்துப் பேசுவார்.
இன்று பெரம்பலூரின் வேப்பூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தொல் திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறையமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அங்கு ஒட்டப்பட்டிருந்த கியூ.ஆர் கோட்-யை (QR Code) தங்களின் செல்போனில் இயக்கி பரிசோதித்தனர். திரையில் திருமாவளவன் தோன்றி பிரச்சாரம் செய்தவுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் தனது செல்போனில் கியூ.ஆர் கோட்-யை ஸ்கேன் செய்து வீடியோ பார்த்தார். மேலும், இப்பிரச்சாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து திருமாவளவனிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: பஜ்ஜி சுட்டும்... மீன் விற்றும்... நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024