ETV Bharat / state

ஆசிரியை கொலை சம்பவம்.. அரசுக்கு திருமாவளவன் எச்சரிக்கை!

தஞ்சாவூர் ஆசிரியை கொலை சம்பவம் குறித்து அரசு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்க தவறினால், அது சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக மாறும் என்று தமிழக அரசை விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திண்டுக்கல்: கட்சி கொடி ஏற்ற விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வியாழக்கிழமை (நவ.21) பழனிக்கு வருகை புரிந்துள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து திருமாவளவன் பேசியதாவது, “ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. தமிழக மக்கள் என்றைக்கு விடுதலை சிறுத்தை கட்சி மீது நம்பிக்கை வைக்கிறார்களோ, அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள். ஆட்சி அதிகாரம் என்பது உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மக்கள் அழைக்கும் அங்கீகாரம். அவற்றை சுட்டிகாட்டும் வகையில், ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஓசூரில் வழக்கறிஞர் படுகொலை மற்றும் தஞ்சாவூர் ஆசிரியை படுகொலை சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “எதிர்பாராமல் நடந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கண்காணிக்க தவறினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறும் என்பது கவலை அளிக்கிறது ”என்றார்.

இதையும் படிங்க: "சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா?" பல்டி அடித்த செல்வப்பெருந்தகை அறிக்கை!

தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக தெரிவித்துள்ள கருத்திற்கு, பதில் அளித்த திருமாவளவன், “அன்புமணி ராமதாஸ் அவர்கள் எதிர்க்கட்சி என்ற வகையில் விமர்சனம் செய்துள்ளாரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து தெரிவித்துள்ளார்? என்பது தெரியவில்லை. ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக ஆதாரங்கள் இருப்பின் அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தகுதியான ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற ஆணை என்பதை காரணம் காட்டி பழனி மலை அடிவாரத்தில் வியாபாரிகள் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. பழனி மேற்கு ரத வீதியில் குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான மடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

2026 இல் விஜயுடன் சேர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்றார். ஜார்கண்ட்டில் தேர்தல் கருத்துகணிப்புகளில், பாஜக வெற்றி பெரும் என்ற தகவல்களுக்கு பதில் தெரிவித்த அவர், “ கருத்துகணிப்புகள் பெரும்பாலும் பொய்த்து போயிருக்கின்றது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.