சென்னை: பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கிட வலியுறுத்தி விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு! பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும்! *பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம்… pic.twitter.com/NY0C5Ez7ZL
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 13, 2024
அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், "அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், போதைப்பொருள் ஒழிப்பு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு முன்மொழிய உள்ளோம். இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக பரப்புரை மேற்கொள்ளவுள்ளேன்.
தமிழர் எழுச்சி நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு முன்மொழிவதுண்டு. அதேபோல், இந்த ஆண்டும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் கருப்பொருளை மையமாகக் கொண்டு முன்மொழிய உள்ளோம்.
கிரீமிலேயர் முறை: தலித் சமூகத்தில் மட்டுமல்ல மொத்தமாக எந்த சமூகத்திலும் ஆணவக் கொலைகள் கூடாது என்பதுதான் விசிகவின் கோரிக்கை. கிரீமிலேயர் முறையை எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் கொண்டு வருவது தான் நாடு முழுவதும் இன்று பேசுபொருளாக உள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அலுவலக உதவியாளர் பதவி கிடைத்தால், அந்த குடும்பத்தில் வேறு யாருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்வதுதான் இந்த தீர்ப்பு. ஒரு தலைமுறை படித்தால் போதும் வேறு யாரும் முன்னேறக்கூடாது என்பதை மறைமுகமாக சொல்கிறது இந்த தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசுபவர்கள். தலித் மக்கள் மீது அக்கறையில் சொல்கிறார்களா? இல்லை வேறு காரணத்திற்காக சொல்கிறார்களா என்று நாம் உற்றுப் பார்க்க வேன்டும்.
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 13, 2024
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும்!
*பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம்… pic.twitter.com/AOUoUcPwGn
வன்னியர் இட ஒதுக்கீடு: 10.5% இடஒதுக்கீடு அரசியல் லாபத்திற்காக, எடப்பாடி பழனிசாமி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் இட ஒதுக்கீடு அறிவிப்பினை வெளியிட்டார். ஓபிசி மக்களுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது. ஆனால், அதை பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. இட ஒதுக்கீட்டை நசுக்கும் முயற்சியே கிரீமிலேயர். திமுக அரசு நிலையான அரசு அல்ல, மாநில அரசே நிலையானது. பல்வேறு கட்சிகள் வரும் போகும். ஆனால், ஒரு தலித்தை முதலமைச்சராக எந்த காலத்திலும் ஆக்க முடியாது.
10.5% சதவிகிதம் வன்னியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு தரவுகள் இல்லை. ஆகையினால் இட ஒதுக்கீடு கொடுக்க முடியவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கூறுவது எஸ்சி,எஸ்டி மக்களுக்காக அல்ல.
ஓபிசி மக்களுக்கான தரவுகள் இல்லை. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு ஓபிசி மக்களுக்கானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும், ஆந்திராவில் வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கப்படுவது sub quota ஆனால் ஆந்திராவில் வழங்கப்படுவது sub class.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 35 கோடி எஸ்சி, எஸ்டி மக்கள் உள்ளனர். வெறும் 35 லட்சம் பேருக்கு பிரபாகரன் தனிநாடு கோரிக்கை விடுத்தார். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் தான் கிரிமீலேயர் முறையையும், பொருளாதார இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்த முயல்கின்றனர்.
தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் என்பது வளர்ச்சி அடைந்த குட்டி முதலாளிகளின் கோஷம். அம்பேத்கர் பார்வையில் அது சாதி இந்துக்களின் கோஷம். தமிழ்நாட்டில் இரண்டு வகையினர் தான் உள்ளனர். திமுக மீது கோவமாக உள்ளவர்கள் விசிகவை திட்டுகின்றனர். விசிக மீது கோவமாக உள்ளவர்கள் திமுகவை திட்டுகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதினால் தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இல்லை. மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவதைத்தான் எதிர்க்கிறோம். சாதி இந்துகளின் அரசுதான் இந்தியா முழுவதும் பல்வேறும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. விசிகவிற்கு சமூகநீதி குறித்து பாடமெடுக்க தேவையில்லை. ஜனநாயகம் குறித்து அறிவுரை வழங்க தேவையில்லை. சாதி ஒழிப்பு தான் விசிகவின் அரசியல் கோட்பாடு" என்று பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி - எழும்பூர் நீதிமன்றம் - Armstorng Murder case