ETV Bharat / state

அதிகார ஆசை காட்டும் விஜய்! விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு என்ன?

ஆட்சியில் அதிகாரம் என்பதை திமுகவோ, அதிமுகவோ கூறினால் அதில் ஒரு தாக்கம் இருக்கும் என விஜயின் அழைப்பு குறித்து வி.சி.க. பதிலளிக்கிறது.

சிந்தனை செல்வன் விஜய் மற்றும் திருமாவளவன்
சிந்தனை செல்வன் விஜய் மற்றும் திருமாவளவன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 5:59 PM IST

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற முடிந்ததுள்ளது. இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தொண்டர்கள் இடையே நீண்ட உரையாற்றினார். அதில் "பெரும்பான்மை இருந்தாலும் கூட்டணி கட்சியினருக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என பேசியது தற்போது பேச்சு பொருளாகி வருகிறது.

இதுகுறித்து எம்எல்ஏவும், விசிகவின் பொதுச் செயலாளருமான சிந்தனைச் செல்வன் நம்மிடையே பேசுகையில், "ஜனநாயக நாட்டில் யார் புதிய அரசியல் கட்சி தொடங்கினாலும் ஒரு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் எப்போதுமே பார்த்தது கிடையாது.

ஆட்சியில் பங்கு: 2001 இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உடன் தேர்தலில் போட்டியிடும் பொழுது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை வைத்திருந்தோம். தமிழகத்தை பொறுத்தவரையில் ஆட்சியில் அதிகாரம் என்பதை திமுக மற்றும் அதிமுக இரண்டும் கட்சிகள் இதைப் பற்றி பேசினால் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மற்ற கட்சிகள் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் பேசுவதால் தாக்கம் ஏற்படுவதில்லை. எங்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற இடதுசாரிகள், மதிமுக கட்சியினர் ஆட்சியில் பங்கு என்ற ஆதரவு கருத்தை தெரிவித்து இருந்தனர். இன்னும் பல அமைப்புகளுக்கு அதுபோன்ற எண்ணம் போக்கு இருக்கிறது.

தொடக்கத்திலேயே விஜய்க்கு இதுபோன்ற பார்வை இருப்பதை நாங்கள் குறையாகப் பார்க்கவில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான கட்சிகள் பெரியார், அம்பேத்கர் ஆகியோரை தலைவர்களாக எடுத்து கையாண்டு வருகின்றது. இதில் நான் பார்பது என்னவென்றால் அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்கிறார். மேலும் அவர் பேசிய பொழுது இரண்டு மூன்று இடங்களில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை பதிவு செய்திருக்கிறார். நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் சாதி ஒழிப்பு என்பதைத் தான் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: "ரஜினி அரசியலுக்கு வராததால் விஜயை இறக்கி விட்டிருக்கலாம்" - சபாநாயகர் அப்பாவு சூசகம்!

சாதி ஒழிப்பு: சாதி ஒழிப்புக்கான செயல் திட்டத்தை முன்னெடுக்காமல் தீண்டாமை ஒழிப்பை பத்தி பேசியிருப்பது நெருடலாக இருந்தது. சாதி என்ற மலத்தை அகற்றாமல் தீண்டாமை என்ற நாற்றத்தை அகற்றுவேன் என்பது இருக்கிறது. காந்தியடிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் சாதியை குறித்து பேசாமல் தீண்டாமை குறித்து பேச முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள்.

சமூகத்தில் எந்த பெரிய மாற்றங்களும் நிகழவில்லை. தீண்டாமை நவீன காலத்தில் வெவ்வேறு வடிவங்களில் வந்திருக்கிறது. தற்போது தீண்டாமை பழைய வடிவத்தில் இல்லை. சாதி ஒழிப்பு என்று பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மதத்தையும், மதத்தின் பேரால் நடக்கும் ஒடுக்குமுறையும் இரண்டாக பிரித்துப் பார்க்க முடியாது.

தொடக்க நிலையில் ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகளை சொல்லி ஆக்கப்பூர்வமாக கட்சியை ஆரம்பித்து மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார்கள். இன்றைய சூழலில் மதத்தின் பெயராலும் அவற்றின் அடையாளங்களின் அடிப்படையிலும் மதவாத போக்கு இருக்கிறது. அதை எதிர்கொள்ள அவர் என்ன சிறப்பு திட்டங்கள் வைத்திருக்கிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சிறந்த நடிகர் விஜய்: புதிதாக எந்த கட்சி வந்தாலும் மக்களுக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும் ,அந்த மாதிரியான ஈர்ப்பு தான் இது. தமிழகத்தின் நீண்ட காலமாக சிறந்த நடிகரக விளங்கும், ரஜினி, கமலுக்கு பிறகு எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த நடிகர் விஜய். நடிகர்களை அரசுத் தலைவராக ஏற்கும் நிகழ்வு கடந்த காலங்களிலிருந்தது போன்று தமிழ்நாட்டில் இப்போது இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

தன்னுடைய கொள்கைகளாலும் செயல்பாட்டினாலும் தான் அரசியல் இயக்கத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியும். மக்களிடையே அவருக்கான ஈர்ப்பை அவர் சினிமா மூலமாக பெற்று இருக்கலாம். ஆனால் அரசியல் பாதையில் தொடர வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.