ETV Bharat / state

துரைமுருகன் - ரஜினி விவகாரம்: "இரண்டு நகைச்சுவைக்கும் நடுவே அகப்பட்டு நசுங்கிவிட்டேன்" - கவிஞர் வைரமுத்து! - vairamuthu talk rajini comedy sense

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 5:39 PM IST

Vairamuthu: இரண்டு நகைச்சுவையும் முட்டிக்கொண்டன. நான் இரண்டு பேருக்கும் மத்தியில் அகப்பட்டு நசுங்கிவிட்டேன் என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் - அமைச்சர் துரைமுருகன் அண்மையில் நகைச்சுவை பேச்சைப் பற்றி பேசினார். அப்போது அவர், "இரண்டு நகைச்சுவையும் முட்டிக்கொண்டன. நான் இரண்டு பேருக்கும் மத்தியில் அகப்பட்டு நசுங்கிவிட்டேன். இந்த பக்கம் ரஜினி எனது ஆருயிர் கலை சகோதரர், இந்தப் பக்கம் அமைச்சர் துரைமுருகன் எனது அரசியல் தலைவர்.

கவிஞர் வைரமுத்து பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இரண்டு பேருக்கும் நல்ல பிள்ளை ஆக வேண்டும் என்றால் நீ என்னவாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ரஜினி ஒரு நகைச்சுவை சொன்னார், துரைமுருகன் ஒரு நகைச்சுவை சொன்னார். நேற்று அந்த நகைச்சுவை ரொம்ப சோகமாக பேசப்பட்டு, இன்று காலை முதல் நகைச்சுவை என்பது இதுதான் என உச்சத்திற்கு வந்துவிட்டது.

இன்றைக்கு துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா? நாங்கள் நகைச்சுவையாக பேசிக் கொண்டோம். ஏனப்பா நீங்கள் பகைச் சுவையாக பார்க்கிறீர்கள் என ஒரு வார்த்தையில் முடித்து விட்டார். எங்கள் தமிழில் ஒரு பழம் பாடல் உண்டு. அதுதான் ரஜினி அவர்களுக்கும், துரைமுருகன் அவர்களுக்கும் இன்று நிகழ்ந்து இருக்கிறது.

கல்லில் விழுந்த பிளவா? தங்கத்தில் விழுந்த பிளவா? கல்லில் விழுந்த பிளவை ஒட்ட வைக்க முடியாது.
தங்கத் தட்டில் பிளவு விழுந்தால் நெருப்பு காட்டினால் ஒட்டிவிடும். தங்கம் பிளவுபடாது, கல் பிளவுபடும். இரண்டு தங்கங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று கூறினார்.

பெரியவர்களின் நட்பு எப்படி இருக்கும் தெரியுமா? தண்ணீரில் அம்புக் கிளிச்சது மாதிரி. அந்த அம்பு கிளித்தால் ரொம்ப நேரம் இருக்குமா? இருக்காது. அந்த அம்பு கிளித்த தடம் நீரோட்டத்தில் கலந்து காணாமல் போவது போல இந்த வம்பு கிளித்த தடமும் நேற்றோடு போய்விட்டது" என தெரிவித்தார்.

முன்னதாக, ''கலைஞர் எனும் தாய்'' புத்தக வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய ரஜினி, முதலமைச்சரைப் பார்த்து, ''எப்படி மூத்த அமைச்சர்களை வைத்து சமாளிக்கிறீர்கள்? அதிலும், அமைச்சர் துரைமுருகன் கலைஞரின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர்'' என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்ந்து, சாகுற நிலையில் இருக்கும்போது நடிப்பதனால் தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது'' என விமர்சித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "நாங்க நண்பர்கள்; நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம்" - ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - rajini vs duraimurugan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.