ETV Bharat / state

வைகோவுக்கு எலும்பு முறிவு.. விரைவில் அறுவை சிகிச்சை! - Vaiko - VAIKO

Vaiko got fracture in his shoulder: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் துரை வைகோ கூறியுள்ளார்.

வைகோ புகைப்படம்
வைகோ புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 4:00 PM IST

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் இல்லத் திருமண விழாவில் இன்று (மே 26) பங்கேற்பதாக இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவரது மகனும், மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளருமான துரை வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வைகோ நேற்று திருநெல்வேலிக்கு வருகை தந்தார். ஆனால், எதிர்பாரா விதமாக நேற்று (மே 25) இரவு வீட்டில் கால் தடுமாறி அவர் கீழே விழுந்ததில், அவரது வலது தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால், தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று (மே 26) காலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் பெறுவார், வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”, என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'இந்தியாவில் மோடிதான் ஹிட்லர்?' - விசிக விருது வழங்கும் விழாவில் முத்தரசன் குற்றச்சாட்டு - VCK Awards

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.