ETV Bharat / state

தஞ்சை ஆட்சியர் பேரில் மோசடி; இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை! - Money Fraud Case in thanjavur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 10:52 PM IST

Updated : Jun 12, 2024, 6:25 AM IST

Money Fraud Case: தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் பணம் கேட்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படம்
கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி, அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் (தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்) நேர்முக உதவியாளர் பேசுவதாகக் கூறி, தஞ்சாவூரைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் மாவட்ட ஆட்சியர் பணம் கேட்பதாக, மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, மாவட்ட ஆட்சியர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புலன் விசாரணை மேற்கொண்டார்.

அந்த விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானம் என்கிற சந்தான பாரதி (47) மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரீட்டா பபியோலா (53) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும், இந்த வழக்கு விசாரணை சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமாரின் உத்தரவு படியும், சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று (ஜூன் 11) இந்த வழக்கில் இருவருக்கும் இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்ட தவறும் பட்சத்தில் மேற்கொண்டு, இருவருக்கும் ஏழு மாதங்கள் கூடுதல் சிறைத் தண்டனையும் விதித்து நீதித்துறை நடுவரால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வலைத்தளம் மற்றும் சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண் 1930 மூலம் புகார் அளிக்குமாறும், பொதுமக்கள் யாரும் சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்படாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்.. திமுக நிர்வாகி மீது புகார்.. அமைச்சர் தூண்டுதலா? - councilor Complaint in SP office

Last Updated : Jun 12, 2024, 6:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.