ETV Bharat / state

கோயம்பேட்டில் மூட்டை தூக்குவதில் போட்டி.. சக தொழிலாளிகளுக்கு அரிவாள் வெட்டு! - koyambedu labours attack - KOYAMBEDU LABOURS ATTACK

Koyambedu Crime: கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் போட்டியால் இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரின் புகைப்படம்
கைது செய்யப்பட்ட இருவரின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 12:11 PM IST

சென்னை: சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைச் சேர்ந்த ரஞ்சித் (19) மற்றும் ஆகாஷ் (29), சாலிகிராமம் சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் (27), சாலிகிராமம் மதியழகன் நகரைச் சேர்ந்த சற்குணம் (28) ஆகியோர் கோயம்பேட்டில் மூட்டை துாக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

மூட்டை தூக்குவதில் தொழில் போட்டி: இவர்களுக்குள் மூட்டை தூக்குவதில் தொழில் போட்டி இருந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் அனைவரும் நேற்று வேளச்சேரியில் லோடு இறக்கி விட்டு, கோயம்பேடு ஏ சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை எழுந்துள்ளது. பின்னர் வெளியே வந்த போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெற்றிவேல் மற்றும் சற்குணம் இருவரும் சேர்ந்து, ரஞ்சித் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரையும் இரும்பு ராடால் தலையில் அடித்து லோடு வேனில் ஏற்றியுள்ளனர். அப்போது லோடு வேனில் இருந்த நபர் ஒருவர், கத்தியால் ரஞ்சித்தை வெட்ட முயன்றுள்ளார். அவர் கத்தியைப் பிடிக்கவே, ரஞ்சித்தின் இடது கை ஆள்காட்டி விரலுக்கு இடையே வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக அனுமதி: அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கோயம்பேடு போலீசாரைக் கண்டதும், ரஞ்சித் மற்றும் ஆகாஷ் ஆகியோரை லோடு வேனில் இருந்து இறக்கி விட்டு, அவர்கள் மூவரும் தப்பியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேலும், லோடு வேனை பின் தொடர்ந்து சென்ற போலீசார், சின்மயா நகர் அருகே லோடு வேனை மடக்கி, அதிலிருந்த வெற்றிவேல் மற்றும் சற்குணத்தை கைது செய்தனர். இதில் தப்பிச்சென்ற மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். சரியான நேரத்தில் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்றால், வெட்டுப்பட்ட இருவருக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

இதையும் படிங்க: பெண்ணுடன் ரகசிய பேச்சு? 'மும்பை போன் கால்'.. ஜெயக்குமார் வழக்கில் பகீர் திருப்பம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.