ETV Bharat / state

திருப்பத்தூரில் மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு.. தந்தை, மகன் படுகாயம்! - Two Cows Death In Lightning Strike - TWO COWS DEATH IN LIGHTNING STRIKE

Two Cows Death In Lightning Strike: திருப்பத்தூர் மாவட்டம், பெரிய வெள்ளக்குட்டை பகுதியில் மின்னல் தாக்கி தந்தை மற்றும் மகன் படுகாயம் அடைந்த நிலையில், இரண்டு பசுக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Photo of 2 Cows Death by Lightning Strike in Tirupathur
திருப்பத்தூரில் மின்னல் தாக்கி உயிரிழப்பு 2 பசு மாடுகளின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 7:59 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரிய வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும், இவரது மகன் ரஞ்சித் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மருந்தியல் (Pharmacology) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த சூழலில், இன்று (மே 18) வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ள ரஞ்சித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரும், தங்களது சொந்த நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகளையும் அவிழ்த்துக்கொண்டு, மழைக்காக அதே நிலத்தில் உள்ள மாமரத்தின் அடியில் பசு மாடுகளுடன் நின்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்பொழுது, கனமழையின் காரணமாக மாமரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சரவணன், அவரது மகன் ரஞ்சித் மற்றும் இரண்டு பசு மாடுகள் ஆகியோரின் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்த நிலையில், தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், உடனடியாக சரவணன் மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகிய இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருவரையும் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மின்னல் தாக்கி உயிரிழந்த இரண்டு பசு மாடுகளையும், ஆலங்காயம் கால்நடை மருத்துவர் விஜயகுமார் பிரேதப் பரிசோதனை செய்த பின்னர், கிராம மக்கள் ஒன்றிணைந்து இரண்டு பசுக்களையும் சம்பவம் நடந்த மாமரத்தின் அடியிலேயே ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர்.

இதையும் படிங்க: வைகை அணை சூழலில் சிக்கி உயிரிழந்த தீயணைப்பு வீரர்... நண்பர்களுடன் குளித்தபோது நேர்ந்த துயரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.