ETV Bharat / state

கோவையில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த நபர் கைது! - country bomb seized - COUNTRY BOMB SEIZED

COUNTRY BOMB SEIZED: கோயம்புத்தூரில் வனவிலங்கு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளுடன் ராமசாமி
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளுடன் ராமசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 9:30 AM IST

கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டுப் பன்றி மற்றும் முயல் வேட்டைக்காக வைக்கப்படும் 'அவுட்க்காய்' எனப்படும் நாட்டு வெடியைக் கடித்து கால்நடைகள் மட்டுமன்றி யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் பலத்த காயமடைவதுடன், சில சமயங்களில் அவை உயிரிழக்க நேரிடுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் கோவை வனக் கோட்டத்தில் ஒட்டி உள்ள கிராமங்களில் திடீர் சோதனை மேற்கொள்வது, சந்தேகப்படும்படியான நபர்களின் வீடுகளில் அதிகாரிகளின் அனுமதியோடு சோதனையிடுவது என தொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) மதுக்கரை வனச்சரகம் உட்பட்ட கரடிமடை பிரிவு பூலுவபட்டி கிராமம் அடுத்த வெள்ளி மேடு பகுதியில் வசிக்கும் ராமசாமி என்ற கருஞ்சி என்பவர் வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படும் நாட்டு வெடி குண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் படி மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் ராமசாமி என்பவர் வீட்டில் சோதனை செய்ய முடிவு செய்தனர்.

தொடர்ந்து பூலுவப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோமதி உதவியுடன் வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது 2 நாட்டு வெடி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நாட்டு வெடி குண்டுகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், இது குறித்து ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ராமசாமியை வெடி பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "வனப்பகுதி ஒட்டி ஒரு சில இடங்களில் நாட்டு வெடி வைக்கப்படுவதாக அவ்வப்போது தகவல் கிடைப்பதால் வனப்பணியாளர்கள் உடனடியாக அங்கு சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு கிடைத்த தகவலில் பேரில் சோதனை செய்ததில் ராமசாமி என்பவர் வீட்டில் இரண்டு நாட்டு வெடி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வன விலங்குகள் வேட்டையாட நாட்டு வெடி வைக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: மக்கள் நீதிமன்றத்தை நாடுவதே குறைந்து விட்டது.. மாவட்ட உரிமையியல் நீதிபதி வருத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.