ETV Bharat / state

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 12:12 PM IST

Updated : Feb 29, 2024, 3:36 PM IST

DMK and CPI Seat Sharing: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணி
திமுக கூட்டணி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியாகும் முன்னரே, திமுக தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது.

அதன்படி, முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்.24ஆம் தேதி 2வது கட்ட பேச்சுவார்த்தைகளை திமுக தொடங்கியது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை உடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர், 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது, அனைத்து கட்சிகளுக்கும் சீட் பகிர்வு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக இடையே இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

யாருக்கு எத்தனை தொகுதி என்பதை விட, நாடு முக்கியம் என்பதால், கூட்டணியில் ஒதுக்கிய இரண்டு தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளோம். தற்போதைக்கு எண்ணிக்கை மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

கூடுதல் தொகுதிகள் கேட்டதில், ஒரு சிக்கலும் இல்லை என்றும், நாட்டிற்காக இரண்டு தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தார். இதேபோல் இன்று நடைபெற்ற 3ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சிபிஎம் கட்சியினருடனும் உடன்பாடு எட்டப்பட்டு அவர்களுக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. திருவாவளவன் கூறுவது ஏன்?

Last Updated : Feb 29, 2024, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.