தென்காசி: தென்காசி நகரப் பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவரது மகனான வினோத் (27) என்பவரை, மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டதாக தென்காசி போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற போலீசார் வினோத்தின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, முதற்கட்ட விசாரணையில் வினோத்தை கொலை செய்த நபர்கள், அதே பகுதியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் மற்றும் இசக்கிராஜா என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த இரண்டு நபர்களும் கடையநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கடையநல்லூர் பகுதிக்கு விரைந்து சென்ற தென்காசி போலீசார், இரண்டு நபர்களையும் பிடித்து தென்காசி அழைத்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையின்போது, ஒரே பகுதியைச் சேர்ந்த இந்த இருவரையும், வினோத் அடிக்கடி முறைத்தபடி பார்த்ததால் கோபத்தில் வினோத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீவிரவாத தடுப்புப் பிரிவு என்ற புதிய துறை அறிமுகம்: டிஐஜியாக மகேஷ் ஐபிஎஸ் நியமனம்