ETV Bharat / state

“தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - டிடிவி தினகரன் காட்டம்! - TTV Dhinakaran

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 3:21 PM IST

TTV Dhinakaran: தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு
டிடிவி தினகரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: கும்பகோணம் அசூர் புறவழிச்சாலையில் உள்ள மஹாலில் அமமுக நிர்வாகியின் திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மணமக்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு மட்டுமின்றி, யார் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உண்மையில் தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது.

நாள்தோறும் 3 அல்லது 4 கொலைகள் நடக்கிறது. 5 ஆயிரத்திற்கும், 10 ஆயிரத்திற்கும் கொலைகள் நடக்கும் கேவலமான நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. இதில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் பெரும்பாலானோர் 20 வயதிற்குப்பட்டோர் தான். இதற்கு காரணம் இவர்கள் வேலையின்மை மற்றும் கஞ்சா கலாச்சாரம், போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி கூலிப்படைகளாக உருவாகியுள்ளனர். இது வருந்தத்தக்கக்கூடிய விஷயம், எனவே இதனைத் தடுக்க தமிழக அரசு, படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்.

அப்போது தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறும். வெறும் சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்றி விட்டால் மட்டும் எல்லாம் மாறி விடாது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற, ஆளும் திமுக வாக்காளர்களுக்கு ரூபாய் ஆயிரம், இரண்டாயிரம் என வழங்கியுள்ளது.

இருப்பினும், பணநாயகத்தை ஜனநாயகம் வெல்ல வேண்டும் என்பது தான் எங்கள் விரும்பம். கர்நாடக அரசு தமிழகத்திற்கான காவிரி நீரையும் தராமல், அங்கு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. ஆனால், அதனை தடுத்து நிறுத்தி, நமக்கான தண்ணீரைக் கேட்டுப் பெற தமிழக முதலமைச்சர் எந்த விதமான முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை என்றார்.

தொடர்ந்து அதிமுகவை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர்கள் முயல்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு நான் பதில் தர முடியாது என்றும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கும். அதுதான் ஜெயலலிதாவின் விருப்பமாக இருக்கும். பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டியது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; 200 - க்கு 200 கட் ஆஃப் எடுத்து அசத்தியுள்ள 65 பேர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.