ETV Bharat / state

அதிமுக தலைமையில் மாற்றமா? டிடிவி தினகரன் அளித்த பதில்! - TTV Dhinakaran

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 5:29 PM IST

TTV Dhinakaran: மூன்றாவது முறையாக மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார் என திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் புகைப்படம்
டிடிவி தினகரன் புகைப்படம் (credits- ETV Bharat Tamil Nadu)

திருச்சி: நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (ஜூன் 4) நடைபெற உள்ளது. இந்நிலையில், யார் இந்தியாவை ஆட்சி செய்வார்கள், யார் மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து வருகிறது.

டிடிவி தினகரன் பேட்டி (credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல திருமணத்திற்கு வந்த, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என கூறப்படுகிறது என்பது குறித்து கேட்டபோது, “மூன்றாவது முறை மோடி ஆட்சிக்கு வருவார் என்பது அன்றே தெரியும்” என தெரிவித்தார்.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் மாற்றம் உண்டாகுமா என்ற கேள்விக்கு, 4ஆம் தேதி எல்லாம் தெரிந்து விடும் எனவும், அதற்கு பிறகு உண்மை என்ன என்பது உங்களுக்கு தெரிந்து விடும் என பதிலளித்தார். தொடர்ந்து, கருத்துக்கணிப்பின்படி அதிமுக எதிர்பார்த்த தொகுதியில் கிடைக்கவில்லை என்றும், தலைமையில் மாற்றம் ஏற்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “தேர்தல் முடிந்தவுடன் அதைப் பற்றி பேசலாம். இந்த நேரத்தில் கருத்துக்களை பேச முடியாது” என்றார். அதிமுக உங்கள் கட்டுப்பாட்டில் வருமா என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டுவது தான் என்னுடைய நம்பிக்கை எனத் தெரிவித்தார்.

கடைசி கட்டமாக அரசியலில் ஆயுதமாக ஆன்மீகத்தை பயன்படுத்துகிறார்களா எனச் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “நான் எல்லா கோயிலுக்கும் செல்வேன். மற்ற தலைவர்கள் கோயிலுக்குச் செல்வது பற்றி பேசுவது மரியாதையாக இருக்காது” எனக் கூறினார். ஓபிஎஸ் அணியில் கோஷ்டி பூசல், கருத்து மாறுபாடு உள்ளது என்பது குறித்த செய்தியாளரின் கருத்துக்கு 4ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் தெரியும் என்றார்.

இதையும் படிங்க: திருமயம் கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்! - Amit Shah At Thirumayam Temple

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.