ETV Bharat / state

தனக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பிய திருச்சி எஸ்.பி.. நடந்தது என்ன? - Trichy SP life threaten - TRICHY SP LIFE THREATEN

Trichy SP life threaten: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த சிறுவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் கடுமையாக எச்சரிக்கை செய்து அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

வருண்குமார் ஐபிஎஸ்
வருண்குமார் ஐபிஎஸ் (Credits - varunkumaripstn instagram)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 11:28 AM IST

திருச்சி: கடந்த நவம்பர் 22ஆம் தேதி பிரபல ரவுடியும் ஏ+ குற்றவாளியாகவும் இருந்த கொம்பன் ஜெகன் என்பவரை போலீஸ் என்கவுண்டர் செய்தனர். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், "கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team)" என்ற முகவரியில் இருந்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகைப்படத்தை பகிர்ந்து, "விரைவில் தலைகள் சிதறும்" "Komban Brothers" என பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, திருச்சி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவேற்றம் செய்தது 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதன் அடிப்படையில், அச்சிறுவனை கைது செய்து, சட்டபிரிவு 153(В), 505(2) IPC r/w 66(D) IT Act-21 கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்த போது, மேலும் 17 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் இரண்டு சிறுவர்களை போலீசார் பிடித்து சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடாமல், கவனமாக கையாள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கை செய்து அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது திருச்சி புதிய விமான முனையம்; பயணிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்பு! - Trichy airport new terminal

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.