திருச்சி: திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள மதிமுக வேட்பாளர் துரை வைகோ அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 3,13,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்தியத் தேர்தல் ஆணைய இணைத்தள விபரம்:
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சிகள் | பெற்ற வாக்குகள் |
1 | துரை வைகோ | மதிமுக | 5,42,213 |
2 | கருப்பையா | அதிமுக | 2,29,119 |
3 | ராஜேஷ் | நாதக | 1,07,458 |
4 | செந்தில்நாதன் | அமமுக | 1,00,747 |
- 5 மணி நிலவரப்படி, திருச்சி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் துரை வைகோ 3,89,141 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கருப்பையா 1,64,535 வாக்குகளும், பாஜக கூட்டணியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 75,978, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் 74,654 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் துரை வைகோ அதிமுக வேட்பாளரை விட 2,24,606 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- 4 மணி நிலவரப்படி, திருச்சி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் துரை வைகோ 282351 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கருப்பையா 119502 வாக்குகளும், பாஜக கூட்டணியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 59547, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் 54496 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 162849 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் துரை வைகோ 245447 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கருப்பையா 106616 வாக்குகளும், பாஜக கூட்டணியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 53981, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் 48609 வாக்குகள் பெற்றுள்ளனர் -3.35PM நிலவரம்
2024 தேர்தலில் மொத்தம் 10,49,093 (67.51%) வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த 2019 தேர்தலில் மொத்தம் 10,48,062 (71.3%) வாக்குகள் பதிவாகின.
2019 தேர்தலில் வென்றது யார்?: கடந்த 2019 தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய திருநாவுக்கரசர் 59.28 சதவீதம் வாக்குகளை (6,21,285 வாக்குகள்) பெற்றுடன், 4.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றார். அவருக்கு அடுத்ததாக தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவன் 15.46 சதவீத வாக்குகளை (1,61,999 வாக்குகள் ) பெற்றார். அமமுக வேட்பாளரான சாருபாலா தொண்டைமான் 9.62 சதவீதம் (1,00,818) வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட வினோத் 6.23 சதவீதம் (65,286 ஓட்டுகள்) வாக்குகளையும் பெற்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: 'மலைக்கோட்டை மாநகர்' திருச்சியை கைப்பற்ற போவது யார்? - Lok Sabha Election 2024