சென்னை: தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டு தொடங்கிய நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் நாட்காட்டி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஓராண்டிற்கான வேலை நாட்கள் 220 நாட்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகள் முன்வைத்தன. அதையேற்று கடந்த ஜூலையில் பள்ளி வேலை நாளாக இருந்த ஒரு சனிக்கிழமையில் (ஜூலை 13) விடுமுறை அளிக்கப்பட்டது. நாளைய தினம் 2வது சனிக்கிழமை வருகிறது. எனவே, பள்ளிக் கல்வித்துறை நாட்காட்டியின் படி வேலை நாள் ஆகும்.
இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2024-25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2வது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்திலும் 10, 24-ம் தேதிகளில் பள்ளிகள் செயல்பட இருந்த 2, 4-ம் சனிக்கிழமைகளில் விடுமுறை தரப்பட்டுள்ளது.
இத்தகவல் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதற்கான திருத்தப்பட்ட நாட்காட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மத்திய பாஜக அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா; நாடாளுமன்றத்தில் முழங்கிய கனிமொழி! - Waqf Amendment bill 2024