சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனி மூட்டத்திற்கும் வாய்ப்புள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை, (ஜன.21) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 20, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 20, 2024
">— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 20, 2024
கடந்த 24 மணி நேரத்தில் வானிலை நிலவரம்: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை ஆனது நிலவியது. மேலும், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 3 சென்டி மீட்டர் மழையும், ஊத்து (திருநெல்வேலி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 2 சென்டி மீட்டர் மழை.
மேலும், வட்டானம் (ராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கோடியக்கரை (மயிலாடுதுறை), காக்காச்சி (திருநெல்வேலி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), மண்டபம் (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தற்போது ஜனவரி 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பதிவான மழை அளவு 50 மில்லி மீட்டர். ஆனால் இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 10.3 மில்லி மீட்டரே ஆகும். இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில், வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூரில், கணிசமாக வெப்பநிலை குறைந்துள்ளது. மேலும் இயல்பு நிலையில் இருந்து கரூர் மாவட்டத்தில், இயல்பை விட மிக அதிகாமாவும், சென்னை, ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 3 தலைமுறையாக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் ஆத்துக்காடு மக்கள்!