ETV Bharat / state

கோவை திமுக அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியர் தற்கொலை முயற்சி! - கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகம்

Suicide attempt in DMK office: கோவையில் நேற்று நடந்த திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, போக்குவரத்து தொழிற் சங்க நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 11:01 AM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் கோவை, நீலகிரி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கம், மின்சார ஊழியர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, தொ.மு.ச போக்குவரத்து தொழிற் சங்கத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் திடீரென தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர். மேலும், தொழிற்சங்கத்திற்குள் இருக்கக்கூடிய பிரச்சனை காரணமாக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, தன்னை வேறு இடத்துக்கு மாறுதல் செய்ய வைத்திருப்பதாகவும், இது குறித்து திமுக நிர்வாகிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக போக்குவரத்து தொழிற் சங்கத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை எம்ஐடி-க்கு வெடிகுண்டு மிரட்டல்..! அடுத்தடுத்து வரும் மிரட்டல்களால் பொதுமக்கள் அச்சம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.