சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்யவதற்காக TNSTC என்னும் செயலி உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வலைதளமான https://www.tnstc.in மூலம் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
இதில் பொதுவாக வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் போன்ற நாட்களில் பயணம் செய்ய முனபதிவுகள் குவிந்து வரும் நிலையில் இதர நாட்களுக்கு யாரும் பெரிதாக முன்பதிவு செய்வதில்லை. இதனை கருத்தில் கொண்டு இதர நாட்களிலும் பயணிகள் முன்பதிவு செய்து எளிதாக பயணம் மேற்கொள் வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில், இதர நாட்களில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யும் பயணிகளுள் மூன்று பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பயணிகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் வழியாக அதிகப்படியான பயணிகள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஜுன் மாதத்தில் இதர நாட்களில் முன்பதிவு செய்த பயணிகளில் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் செய்து அவற்றில் முதல் மூன்று பயணிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், இதர 10 பயணிகளுக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைபடுத்தும் வகையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் இன்று ஜூலை 1ஆம் தேதி கணினி குலுக்கல் முறை நடத்தப்பட்டது. இந்த குலுக்கல் முறையில் N.பிரவீன், F.முபாஷீர், B.செல்வகுமார் ஆகியோர் முதல் மூன்று நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு பெறவுள்ளனர். மேலும் M.பிரவீன், வேல்முருகன், நவீன் குமார், S.பிரதீப், V.வெல்ஜின் நிஜோ, S.பிரசன்னா, M.ஜெய்நுல், P.முருகன், ரேவதி,P.கண்ணன் ஆகிய பத்து பேர் தேர்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசாக அவர்களுக்கு தலா ரூபாய் 2ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஊரணி நிலத்தை ஆக்கிரமிக்கும் ஸ்பிக் நிர்வாகம்... நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் ஊர் மக்கள் மனு!