ETV Bharat / state

சுதந்திர தினம் தொடர் விடுமுறை; சென்னையிலிருந்து ஸ்பெஷல் பஸ்கள் இயக்கம்! - weekend special bus - WEEKEND SPECIAL BUS

weekend special bus: சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள் - கோப்புப்படம்
அரசு பேருந்துகள் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 9:25 PM IST

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அந்தந்த மண்டலங்களில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் மூலம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “சுதந்திர தினம் (ஆக.15) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு (ஆக.14) அன்று சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு (ஆக.14 - புதன்கிழமை) 470 பேருந்துகளும், (ஆக.16, 17) ஆகிய தினங்களில் 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு (ஆக.14 - புதன்கிழமை) அன்று 70 பேருந்துகளும், (ஆக.16,17) ஆகிய தினங்களில் 65 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து (ஆக. 14, 16,17)ஆகிய நாட்களுக்கு 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

அதேபோல், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை - 20 ஆயிரத்து 410 பயணிகளும், வெள்ளிக்கிழமை 3 ஆயிரத்து 743 பயணிகளும், சனிக்கிழமை - 4 ஆயிரத்து 196 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 17 ஆயிரத்து 347 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “தமிழகத்தில் 20 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்”- அமைச்சர் மா.சு. தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.