ETV Bharat / state

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9491-ஆக உயர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்,தேர்வு எழுதும் தேர்வர்கள்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம், தேர்வு எழுதும் தேர்வர்கள் (Credits - TNPSC)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 6:40 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் - 3, தனிச் செயலாளர் , இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2023 ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது.

பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வை மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர். 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.

முதலில் 6 ஆயிரத்து 244 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 2 முறை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன் பின் மொத்தம் 8 ஆயிரத்து 932 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகள் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேர்வர்கள் தங்களது தரவரிசை மற்றும் மதிப்பெண்களை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை.

இதையும் படிங்க: TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு! தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தெரிவு செய்யப்படுவர்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல், விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் அல்லது கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்படமாட்டாது. எனவே தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.